டெல்லியில் தொடங்கிய 3-வது, இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 371 ரன்க்ள் விளாசியுள்ளது.
ஆட்ட நேர முடிவில் விராட் கோலி 186 பந்துகளைச் சந்தித்து 16 பவுண்டரிகளுடன் 156 ரன்களுடனும் ரோஹித் சர்மா 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முரளி விஜய் 267 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 155 ரன்கள் எடுத்தார். தொடர்ச்சியாக 3 சதங்களை எடுத்த முதல் கேப்டனுமானார் கோலி, அதாவது 3 டெஸ்ட்கள் கொண்ட தொடரில்.
லேசான புற்கள் தெரியும், ஒன்றுமேயில்லாத, ஒருவகையில் செத்த பிட்சில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ததில் ஆச்சரியமில்லை.
விராட் கோலி தென் ஆப்பிரிக்கா வேகத்துக்குத் தயாராக வேண்டும் என்று புல்தரை கேட்கிறார், ஆனால் இங்கு புற்கள் அதிகமில்லை. மீண்டும் ஒரு மாடல் துணைக்கண்ட பிட்ச், டாஸ் வென்று முதலில் பேட் செய்து வெளுத்துக் கட்டும் பிட்ச்.
வேகப்பந்து வீச்சை அதிகம் எதிர்கொள்வதற்குப் பதிலாக முதல் நாள் பிட்சில் இந்திய பேட்ஸ்மென்கள் ஸ்பின்னர்களை அதிகம் எதிர்கொண்டனர். வேகப்பந்து வீச்சு மொத்தம் 31 ஓவர்கள், ஸ்பின் 59 ஓவர்கள்.
பார்மை மீட்க என்ன செய்யப்போகிறார் ரஹானே?
மிகச்சாதாரணமாக நாள் தொடங்கியது முதலே ஓவருக்கு 4 ரன்கள் விகிதம் இயல்பாக வந்து கொண்டிருந்தது. இத்தகைய பிட்ச்களிலும் அஜிங்கிய ரஹானேயின் பார்ம் கவலையளிப்பதாக தொடர்கிறது.
தென் ஆப்பிரிக்க தொடருக்கு மிக முக்கியமான வீரர் அவர், அனுபவ வீரர், அவரது மோசமான பார்ம் தொடர்வது இந்திய அணிக்கு நல்லதல்ல. கொழும்புவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 132 ரன்கள் எடுத்த பிறகு ரஹானேயின் டெஸ்ட் ஸ்கோர் 17, 4, 0, 2, 1 என்று சரிவு கண்டுள்ளது.
இன்று 1 ரன் எடுத்த நிலையில் இடது கை சைனமன் பவுலர் வீசிய கூக்ளியில் பீட்டன் ஆகி ஸ்டம்ப்டு ஆனார். முரளி விஜய்யும் 155 ரன்கள் எடுத்து சண்டகன் பந்தில் ஸ்டம்ப்டு ஆனார்.
விராட் கோலி, முரளி விஜய் ஆதிக்கம்:
இன்று காலை ஷிகர் தவண் 4 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய திலுருவன் பெரேரா பந்தை ஸ்வீப் செய்தார், சரியாக ஆடவில்லை டாப் எட்ஜ் ஆகி டீப் பேக்வர்ட் ஸ்கொயர்லெக்கில் லக்மல் கேட்ச் எடுத்தார். திலுருவன் பெரேராவின் 100-வது விக்கெட்டாகும் இது. கொஞ்சம் தடுமாறி கேட்ச் எடுத்தார். புஜாரா 23 ரன்கள் எடுத்த நிலையில் கமகே வைத்த லெக் திசைப் பொறியில் சிக்கினார். வைட் ஆஃப் த கிரீசிலிருந்து வீசிய பந்து உள்ளே வர புஜாரா கிளான்ஸ் செய்தார், ஆனால் தரையில் ஆடாததால் லெக் ஸ்லிப்பில் இவருக்காகவே நிறுத்தப்பட்டிருந்த சமரவிக்ரம கேட்ச் எடுத்தார், இந்தியா 78/2.
இதன் பிறகு விஜய், கோலி ஜோடி 283 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.
விராட் கோலி தொடர்ச்சியான 3-வது சதத்தை எடுத்தார், இந்தச் சதம் 110 பந்துகளில் எடுக்கப்பட்டது. விஜய், கோலிக்கு கொஞ்சம் பிரச்சினைகள் கொடுக்கப்பட்டது என்றால் அது ஆஃப் ஸ்பின்னர் தனஞ்சய் டிசில்வா பந்தில்தான். 122 பந்துகளில் விஜய் ஆஃப் திசையில் அடித்த ஷாட் காற்றில் எழும்பி லெக் திசையில் சந்திமாலுக்கு முன்னால் விழுந்தது. பிறகு 154 ரன்கலில் இவர் பந்தில் பிளிக் ஷாட் ஒன்று காற்றில் எழும்பி ரோஷன் சில்வா விரல்களில் பட்டுச்சென்றது, கோலியின் எட்ஜையும் ஒருமுறை பிடித்தார் டிசில்வா.
ஆனால் இவருக்கு 15 ஓவர்களே கொடுக்கப்பட்டன, இதில் 45 ரன்களை மட்டுமே அவர் கொடுத்தார். ஸ்பின்னர்களின் லெந்த்களை கோலி அபாரமாக கணித்தார், அபாரமான கால் நகர்த்தல்களுக்கு முன் பந்துகள் திரும்பாத பிட்சில் இலங்கை என்ன செய்ய முடியும்? முரளி விஜய் கமகேயை ஒரே ஓவரில் கவர் டிரைவ், ஆன் டிரைவ் ஆட, விராட் கோலி கமகேயை 3 பவுண்டரிகளை ஒரே ஓவரில் அடித்தார்.
தேநீர் இடைவேளையின் போது விஜய் 101 ரன்களில் இருந்தார், வந்த பிறகு சில அருமையான பவுண்டரிகளை அடித்தார். பெரேராவும், சண்டகனும் சேர்ந்து 44 ஓவர்கள் வீசி 207 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர் என்றால் கோலி, விஜய்யின் ஆதிக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.
இந்தியா 90 ஓவர்களில் 371/4. விராட் கோலி 156 நாட் அவுட். ரோஹித் சர்மா 6 நாட் அவுட்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago