மும்பை: எதிர்வரும் ஆசிய ஒருநாள் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த தொடரில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் அது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது அறிமுகமாக அமையும்.
20 வயதான திலக் வர்மா, அண்மையில் நிறைவடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் தனது திறனை வெளிப்படுத்தி இருந்தார். அதையடுத்து ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் அவர் இருக்க வேண்டும் என பலரும் சொல்லி வந்தனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடி வருகிறார். தற்போது அயர்லாந்து பயணித்துள்ள இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார்.
திலக் வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து அஜித் அகர்கர் விளக்கம்: “மேற்கிந்திய தீவுகளில் திலக் வர்மாவிடம் செயல்திறனை மட்டும் நாங்கள் பார்க்கவில்லை, சிறந்த மனோபாவத்துடன் நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் செயல்பட்டார். இதுவே அவரை, ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணியுடன் அழைத்துச் செல்லவும், திறனை மேலும் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பையும் கொடுத்துள்ளது. மீண்டும் ஒரு இடது கை வீரர், மிகவும் நம்பிக்கைக்குரியவராக திலக் வர்மா தெரிகிறார்.
அதிர்ஷ்டவசமாக நாங்கள் ஆசிய கோப்பை தொடருக்கு 17 பேரை தேர்வு செய்துள்ளோம். இது உலகக் கோப்பையில் 15 ஆக இருக்கும். நேரம் வரும் போது நாங்கள் அந்த முடிவை எடுப்போம். ஆனால் இந்த நேரத்தில், குறைந்தபட்சம், பயிற்சியாளர் மற்றும் கேப்டனுக்கு திலக் வர்மாவை பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது” என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
» விதிகளை மீறி டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க முயற்சி: டிடிவி தினகரன் கண்டனம்
» “சந்திரயான் வெற்றியுறின் அது மானுட வெற்றி” - வைரமுத்து கருத்து
திலக் வர்மா நம்பிக்கை: “எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென்ற கனவு எனக்குள் இருந்தது. ஆனால், இது மிகவும் பெரியது. அடுத்தடுத்த மாதங்களில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அதற்கு நான் தயாராகிக் கொண்டுள்ளேன்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் எனது மாநில அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிகம் விளையாடி உள்ளேன். அந்த நம்பிக்கையை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலும் மடைமாற்றுவேன்” என திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago