ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியை வீழ்த்தியது. சென்னையின் எப்சி அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.
சென்னை நேரு விளையாட்டரங்களில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்க நிமிடங்களில் இரு அணிகளும் மாறி மாறி எதிரணி கோல் கம்பத்தை நோக்கி பந்தை கொண்டு செல்லத் தொடங்கின. 7-வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரிகிக்கின் போது, கொல்கத்தா வீரர் பிபின் சிங்கின் கோல் அடிக்கும் முயற்சியை சென்னையின் எப்சி கோல் கீப்பர் கரன்சித் சிங் முறியடித்தார். 16-வது நிமிடத்தில் சென்னை வீரர் ஜெய்ம் காவிலன் நல்ல கோல் வாய்ப்பை வீணடித்தார்.
29-வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் அடுத்தடுத்த கோல் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 33-வது நிமிடத்தில் கிடைத்த அருமையான கோல் வாய்ப்பை கொல்கத்தா வீரர் குகி தவறவிட்டார். 35-வது நிமிடத்தில் கொல்கத்தாவின் ஸெகியூனா, கோல் கம்பத்தை நோக்கி உதைத்த பந்தை சென்னை கோல்கீப்பர் கரன்சித் சிங் தடுத்தார்.
அடுத்த நிமிடத்திலேயே சென்னை வீரர் ஜெய்ம் காவிலன் உதைத்த பந்து கோல் கம்பத்துக்கு வெளியே சென்று ஏமாற்றம் அளித்தது. 38-வது நிமிடத்தில் கோல் அடிக்க கிடைத்த நெருக்கமான வாய்ப்பை சென்னை அணி தவறவிட்டது. 41-வது நிமிடத்தில் கொல்கத்தாவின் ஸெகியூனாவை கீழே தள்ளியதால் சென்னை கேப்டன் செரெனோ-க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை.
47-வது நிமிடத்தில் சென்னை வீரர் ஜெர்ரி கடத்திக் கொடுத்த பந்தை, சக வீரர் நெல்சன் எதிரணி கோல் கம்பத்தை நோக்கி உதைத்தார். அதனை கொல்கத்தா கோல்கீப்பர் டெப்ஜித் மஜூம்தர் தடுத்தார். 65-வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக்கில் சென்னை வீரர் ஜே ஜே லால்பெகுலா தலையால் முட்டி அசத்தலாக கோல் அடித்தார். கார்னரில் இருந்து காவிலன் உதைத்த பந்தை கோல்கம்பத்துக்கு அருகே வைத்து கேப்டன் ஹென்றிக் சேரேனோ தலையால் முட்டினார். பந்து தரையில் விழுந்து எழும்பிய நிலையில் அருகில் நின்ற ஜேஜே லால்பெகுலா சாமர்த்தியமாக தலையால் தட்டி விட்டு கோலாக மாற்றினார்.
இதனால் சென்னை அணி 1-0 என முன்னிலை பெற்றது. 74-வது நிமிடத்தில் கொல்கத்தாவின் ரூபர்ட் நோங்ரம்-ஐ கீழே தள்ளியதால் சென்னை வீரர் நெல்சனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 77-வது நிமிடத்தில், கொல்கத்தா வீரர் ஸெகியூனா, சென்னை அணியின் தடுப்பு வீரர்கள் இருவரின் ஊடாக பந்தை கடத்திச் சென்று மின்னல் வேகத்தில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது.
78-வது நிமிடத்தில் சென்னை வீரர் ஜே ஜே உதைத்த பந்து கோல் கம்பத்துக்கு வெளியே சென்று ஏமாற்றம் அளித்தது. 80-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் குகி-யின் கோல் முயற்சியை அபாரமாக தடுத்தார் சென்னை கோல் கீப்பர் கரன்சித் சிங். 84-வது நிமிடத்தில் ஜெர்ரி லாரின்ஸூலா பந்தை கட் செய்து இனிகோ கால்டிரானிடம் கொடுக்க அவர் கொல்கத்தா வீரர் டாம் தோர்பே-வின் தடுப்பையும் மீறி அற்புதமாக கோல் அடித்தார். இதனால் சென்னை அணி 2-1 என்ற முன்னிலையை அடைந்தது.
87-வது நிமிடத்தில் சென்னை வீரர் தோய் சிங்-இன் கோல் முயற்சி பலனளிக்கவில்லை. 89-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் குகி, சென்னை அணியின் தடுப்பாட்ட வீரரின் முன்பாகவே பந்தை கடத்தி சென்று இலக்கை நோக்கி தட்டிவிட்டார். இதனை கோல்கீப்பர் கரன்சித் சிங் தடுத்தார். ஆனால் பந்து அவர் மீது பட்டு திரும்பி வர மீண்டும் சுதாரித்த குகி அதை கோலாக மாற்றினார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்தது.
ஹாட்ரிக் வெற்றி
கடைசி நிமிடத்தில் ஜே ஜே லால்பெகுலா மீண்டும் கோல் அடித்து அசத்தினார். இனிகோ கால்டிரானிடம் இருந்த கிராசை பெற்று இந்த கோலை ஜே ஜே லால்பெகுலா அடித்தார். இதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. முடிவில் சென்னையின் எப்சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. கடந்த இரு ஆட்டங்களிலும் சென்னையின் எப்சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு அணியையும், 1-0 என்ற கோல் கணக்கில் புனே அணியையும் வீழ்த்தியிருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் 9 புள்ளிகளுடன் சென்னையின் எப்சி அணி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago