பாகு: உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங், ஷிவா நர்வால் ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங், ஷிவா நர்வால் ஜோடி, துருக்கியின் லேடா தர்ஹான், யூசுப் டிகெக் ஜோடியை எதிர்கொண்டது. இதில் ஈஷா, ஷிவா ஜோடி 16-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.
அதேவேளையில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய ஜோடிகள் தகுதி சுற்றை தாண்டவில்லை. மெகுலி கோஷ், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஜோடி 630.2 புள்ளிகள் சேர்த்து 9-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தது. மற்றொரு இந்திய ஜோடியான ரமிதா, திவ்யான்ஷ் சிங் பன்வார் 628.3 புள்ளிகளுடன் 17-வது இடம் பிடித்தது.
மகளிருக்கான ஸ்கீட் பிரிவில் பரினாஸ் தலிவால், கனேமத் செகோன் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 351 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தது. இந்த தொடரில் இந்தியா பதக்க பட்டியலில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என 2-வது இடத்தில் உள்ளது. சீனா 5 தங்கம், 2 வெண்கலத்துடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.
» உலக தடகள சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம் - தங்கம் வெல்லும் முனைப்பில் நீரஜ் சோப்ரா
» அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி - இந்திய அணி வெற்றி
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago