துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துபாயில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிம் ஷெய்பர்ட் 34 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் விளாசினார்.
156 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 19.4 ஓவர்களில் 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஆர்யன்ஷ் சர்மா 43 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் சேர்த்தார். நியூஸிலாந்து தரப்பில் டிம் சவுதி 4 ஓவர்களை வீசி 25 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
» அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி - இந்திய அணி வெற்றி
» ODI WC 2023 | இந்திய அணி நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறும்: டிவில்லியர்ஸ் கணிப்பு
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago