நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னாள் முதல் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது.
33 வயதான வோஸ்னியாக்கி கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடருடன் ஓய்வு பெற்றிருந்தார். 2 குழந்தைகளுக்கு தாயான நிலையில் கடந்த மாதம் அவர், மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் களமிறங்கினார்.
2018-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள வோஸ்னியாக்கி 2009 மற்றும் 2014-ம் ஆண்டு அமெரிக்க ஓபனில் 2-வது இடம் பிடித்திருந்தார். அமெரிக்க ஓபனில் இரு முறை பட்டம் வென்றுள்ள 43 வயதான வீனஸ் வில்லியம்ஸ் 24-வது முறையாக தற்போது களமிறங்க உள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
54 mins ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago