மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் தோல்வி: தோனியின் மேற்கோளை சுட்டிக்காட்டிய அஸ்வின்

By செய்திப்பிரிவு

சென்னை: அண்மையில் நிறைவடைந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-3 என்ற கணக்கில் இழந்தது இந்தியா. அது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் இந்திய வீரர் அஸ்வின்.

இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரை மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக வென்றது. அதே நேரத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி 5 போட்டிகள் டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியது. இருந்தும் அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 5-வது போட்டியில் தோல்வியை தழுவியது.

இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த சூழலில் அஸ்வின் தனது கருத்தை தனது யூடியூப் சேனல் ஊடாக தெரிவித்துள்ளார்.

“தோல்வியில் இருந்து நிறைய பாடங்களைப் பெற முடியும். ஆனால், வெற்றி பெற்றாலும் அதிலிருந்து பாடங்களை பெறுபவர்கள் தான் சாம்பியனாக முடியும் என தோனி மற்றும் எனது பயிற்சியாளர்கள் சொல்வார்கள். அந்த வகையில் டி20 தொடரில் தோல்வியில் இருந்து நிறைய படிப்பினையை நாம் பெறலாம். அணியின் பேட்டிங் ஆர்டரை பலப்படுத்துவது. 8-வது பேட்ஸ்மேன் தொடங்கி இறுதி வரை அதை எப்படி செய்ய முடியும் என விவாதிக்கப்பட்டு வருகிறது. நம்மிடம் உள்ள சோர்ஸை கொண்டு அதை எப்படிச் செய்கிறோம் என்பது தான் விஷயம். ஒவ்வொரு வீரருக்கும் அணியில் அவர்களது ரோல் என்ன என்பது தெளிவுபடுத்தினால் நிச்சயம் அதற்கான ரிசல்ட்டை அறுவடை செய்ய முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ லிங்க்..

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE