டி20 கிரிக்கெட் தரவரிசையில் ஷுப்மன் கில் முன்னேற்றம்

By செய்திப்பிரிவு

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 25-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் 43 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தைப் பிடித்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் தொடரில் கில், 102 ரன்கள் சேர்த்திருந்தார்.

இதற்கு முன்பு அவர், அதிகபட்சமாக 30-வது இடம் வரை முன்னேறியிருந்தார். மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 88-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் சூர்யகுமார் யாதவ் தொடர்கிறார். 2-வது இடத்தில் பாக். வீரர் முகமது ரிஸ்வான், 3-வது இடத்தில் பாபர் அசாம் உள்ளனர்.

மேற்கு இந்தியத் தீவுகள் வீரர்களில் பிரண்டன் கிங் 5 இடங்கள் முன்னேறி 13வது இடத்தையும், கைல் மேயர்ஸ் 2 இடங்கள் முன்னேறி 45வது இடத்தையும், ஷிம்ரன் ஹெட்மயர் 16 இடங்கள் முன்னேறி 85வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் யாதவ் 23 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தை அடைந்துள்ளார். முதலிடத்தில் ரஷித் கானும் (ஆப்கானிஸ்தான்), 2-வது இடத்தில் ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா), 3-வது இடத்தில் வனிந்து ஹசரங்கா (இலங்கை) ஆகியோர் உள்ளனர்.

மேற்கு இந்தியத் தீவுகளின் அகீல் ஹோசைன் 3 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தையும், ஜேசன் ஹோல்டர் 25-வது இடத்தையும், ரொமாரியா ஷெப்பர்டு 20 இடங்கள் முன்னேறி 63-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்