ஆசிய கோப்பை கிரிக்கெட் | நேபாள அணியில் சந்தீப் லமிச்சனேவுக்கு இடம்

By செய்திப்பிரிவு

காத்மாண்டு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 17 பேர் கொண்ட நேபாள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சந்தீப் லமிச்சனே சேர்க்கப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டன்ர் ரோஹித் பவுடல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாகிஸ்தான், இலங்கை நாடுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் கலந்துகொள்கின்றன. இந்த தொடரில் கலந்துகொள்ளும் நேபாளம் அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பாகிஸ்தானுடன் 30-ம் தேதி மோதுகிறது. இந்த ஆட்டம் முல்தானில் நடைபெறுகிறது.

தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் நேபாளம், இந்தியாவுடன் செப்டம்பர் 4-ம் தேதி கண்டியில் மோதுகிறது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் நேபாள அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கேப்டனாக ஆல்ரவுண்டர் ரோஹித் பவுடல் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லமிச்சனேவும் இடம் பெற்றுள்ளார்.

அணி விவரம்: ரோஹித் பவுடல் (கேப்டன்), குஷால் புர்டெல், ஆசிப் ஷேக், பீம் ஷர்கி, குஷால் மல்லா, ஆரிப் ஷேக், திபேந்திர சிங் ஐரி, குல்ஷன் ஜா, சோம்பால் கமி, கரண், சந்தீப் லமிச்சனே, லலித் ராஜ்பன்ஷி, பிரதீஷ் ஜிசி, ஷ்யாம் தாகல், ஜோரா, கிஷோர் மஹதோ மற்றும் அர்ஜுன் சவுத்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்