இங்கிலாந்தில் நடைபெறும் ‘ஒன் டே கோப்பை’ கவுன்ட்டி கிரிக்கெட் தொடரில் நார்த்தாம்ப்டன் ஷயர் அணிக்காக ஆடும் பிரித்வி ஷா, நேற்று 153 பந்துகளில் 244 ரன்களை விளாசி முதல் தர கிரிக்கெட் சாதனைகள் பலவற்றை முறியடித்துள்ளார். இதையடுத்து 415 ரன்கள் குவித்த நார்த்தாம்ப்டன் ஷயர் அணி பிறகு சோமர்செட் அணியை 328 ரன்களுக்கு சுருட்டி அபார வெற்றி பெற்றது.
நார்த்தாம்ப்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 244 ரன்கள் விளாசித்தள்ளிய பிரித்வி ஷா, அதில் 28 பவுண்டரிகள் 11 சிக்சர்களை வெளுத்து வாங்கினார். இதன் மூலம் ஒன் டே கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை எடுத்த வீரர் என்ற பெருமையை எட்டியுள்ளார். மேலும், சவுரவ் கங்குலி உள்ளிட்ட ஜாம்பவான்கள் சிலரின் சாதனைகளையும் தூள் பறக்க விட்டுள்ளார் பிரித்வி ஷா.
இந்த இன்னிங்ஸில் 100 ரன்களை 81 பந்துகளில் எடுத்தார். இது நார்த்தாம்ப்டன் ஷயருக்கான அவரது முதல் சதமாகும். பிறகு அடுத்த 48 பந்துகளில் மேலும் 100 ரன்களை விளாசி 129 பந்துகளில் 200 ரன்களை எட்டினார். 244 ரன்களை 153 பந்துகளில் எடுத்து ஆட்டமிழந்தார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் பிரித்வி ஷா எடுக்கும் இரண்டாவது இரட்டைச் சதமாகும் இது. முன்னதாக விஜய் ஹசாரே டிராபியில் 2020-21-ல் 227 ரன்களை மும்பைக்காக எடுத்தார். இதுவும் இந்த தொடரின் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக கெண்ட் அணிக்காக ஆலி ராபின்சன் 206 ரன்களை எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இப்போது இதை இந்திய வீரராக பிரித்வி ஷா முறியடித்து இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
» துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ ட்ரெய்லர் எப்படி?
» ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
ரோஹித் சர்மா லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 2 இரட்டைச் சதங்களை எடுத்துள்ளார். இப்போது பிரித்வி ஷா இணைந்துள்ளார். மொத்தமாக இரண்டு இரட்டைச் சதங்களை லிஸ்ட் ஏ-வில் எடுத்த 4வது வீரர் ஆவார் பிரித்வி. ரோஹித் சர்மா 3 இரட்டை சதங்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக சவுரவ் கங்குலி 1999 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் எடுத்த 183 தான் அதிகபட்ச இந்திய தனிப்பட்ட ஸ்கோராக இருந்தது. இப்போது பிரித்வி ஷா இதனை முறியடித்துள்ளார். மேலும் 2016-ம் ஆண்டில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இப்போதைய பாஸ்பால் இங்கிலாந்தின் இடது கை தொடக்க வீரர் பென் டக்கெட் எடுத்த 220 ரன்கள் மைல்கல்லையும் கடந்து விட்டார் பிரித்வி. இன்னும் கொஞ்சம் அதிரடி காட்டியிருந்தால் இங்கிலாந்து வீரர் அலிஸ்டர் பிரவுன் எடுத்த 268 ரன்கள் சாதனையை முறியடித்திருப்பார்.
மிகவும் அனாயசமாக ஆடியுள்ளார் பிரித்வி ஷா. மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விளாசித் தள்ளியுள்ளார். ஒரு சிக்ஸ் மைதானத்துக்கு வெளியே சென்றது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஹூக் ஷாட், புல் ஷாட், கட் என கட்டுப்பாட்டுடன் ஆடினார். இந்த இன்னிங்ஸில் டேவிட் சேல்ஸ் என்ற வீரரின் 161 ரன்கள் மற்றும் 2013-ல் டேவிட் வில்லேயின் 167 ரன்களையும் கடந்து சென்றார் பிரித்வி.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago