இலங்கைக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஸ்வின் தனது டெஸ்ட் 300 விக்கெட்டுகள் சாதனையை நிகழ்த்தினார்.
2-வது இன்னிங்சில் 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின், இந்திய அணி டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
டெனிஸ் லில்லி 56 டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை எட்டி நீண்ட காலமாக சாதனையை தன் வசம் வைத்திருந்தார், இந்நிலையில் 54 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றி லில்லியை முறியடித்துள்ளார்.
அதேபோல் 300 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய ஸ்பின்னர் என்ற வகையில் முத்தையா முரளிதரன் சாதனையையும் கடந்தார். மேலும் 300 விக்கெட்டுகள் மைல்க்களை எட்டிய 8-வது ஸ்பின்னராவார் அஸ்வின்.
இந்திய அணியில் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோருக்குப் பிறகு 300 விக்கெட்டுகள் சாதனை புரிந்த ஸ்பின்னரானார் அஸ்வின்.
அதே போல் குறைந்த பந்துகளில் அவர் இந்த 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், அதாவது ஷேன் வார்னை விட 424 ஓவர்கள் குறைவாக வீசி அஸ்வின் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளதாக கிரிக் இன்போ புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
அஸ்வினுக்கு அடுத்த இடத்தில் டெனிஸ் லில்லி 56 டெஸ்ட் போட்டிகளிலும், முரளிதரன் 58 டெஸ்ட் போட்டிகளிலும் ஹாட்லி, மார்ஷல், ஸ்டெய்ன் ஆகியோர் 61 டெஸ்ட் போட்டிகளிலும் 300 விக். மைல்கல்லை எட்டியுள்ளனர்.
துணைக்கண்ட பவுலர்களில் ஸ்பின்னர்களில் நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பவர் அஸ்வின், அதாவது 52.07 இவரது ஸ்ட்ரைக் ரேட். துணைக்கண்டத்தில் வக்கார் யூனிஸ்தான் சரியான ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார், அது 42.04. அதாவது 300 விக்கெட்டுகள் வீழ்த்திய தருணத்தில் இந்த ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருந்தார் வக்கார் யூனிஸ்.
அதேபோல் 2011-ல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான அஸ்வின் 6 ஆண்டுகளில் 300 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினார். ஷேன்வார்ன், இயன் போத்தம், ஆகிய பவுலர்களூம் 6 ஆண்டுகளில் 300 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago