ODI WC 2023 | ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுஷேன் நீக்கம்

By செய்திப்பிரிவு

சிட்னி: இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த நிலையில் இந்த தொடருக்கான 18 வீரர்கள் அடங்கிய முதற்கட்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஐசிசி விதிகளின்படி செப்டம்பர் 28-ம் தேதிக்கு முன்னதாக இந்த அணி 15 வீரர்கள் என்ற அளவில் குறைக்கப்படும். ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

லபுஷேன் நீக்கம்: லபுஷேன் கடந்த ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தில் இடம் பெற்று இருந்தார். 2020-ம் ஆண்டு ஜனவரியில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான அவர், இதுவரை 30 போட்டிகளில் விளையாடி உள்ளார். லபுஷேன் நீக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று வீரர்களாக சுழற்பந்து வீச்சாளர் தன்வீர் சங்ஹா, ஆல்ரவுண்டர் ஆரோன் ஹார்டி சேர்க்கப்பட்டுள்ளனர்.

உலகக் கோப்பை தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 8-ம் தேதி இந்தியாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, நேதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டாயினிஸ், சீன் அபாட், ஆஷ்டன் அகர், தன்வீர் சங்கா, ஆடம் ஸம்பா, ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்