கயானா: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ள நிலையில், இந்திய அணி இன்னும் சிறப்பாக பேட் செய்திருக்க வேண்டும் என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா வென்றது. தற்போது இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது அந்த அணி. அடுத்த போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில், போட்டிக்கு பின் தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தது. “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எங்களது பேட்டிங் செயல்பாடு எனக்கு திருப்தி தரவில்லை. நாங்கள் சிறப்பாக பேட் செய்திருக்க வேண்டும். 160 அல்லது 170 ரன்களை எடுத்திருக்க வேண்டும். அணியின் தற்போதையை சேர்க்கையில் டாப் 7 பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட வேண்டி உள்ளது. அதன் மூலம் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறோம். பேட்ஸ்மேன்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து ஆட வேண்டும். இது எங்கள் கற்றல் செயல்பாட்டில் ஒரு படி. நிச்சயம் வரும் நாட்களில் சிறப்பாக செயல்படுவோம். திலக் வர்மா, 4-வது பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்படுகிறார். அவருக்கு இதுதான் 2-வது சர்வதேச போட்டி என யாரும் சொல்ல முடியாத வகையில் பேட் செய்கிறார்.” இவ்வாறு பாண்டியா தெரிவித்திருந்தார்.
இந்த தொடரை இந்தியா வெல்ல வேண்டுமென்றால் எஞ்சியுள்ள 3 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதுவே மேற்கிந்தியத் தீவுகள் அணி மேலும் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட தொடரை வென்று விடும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago