WI vs IND | நிகோலஸ் பூரன் அதிரடி ஆட்டம் - விக்கெட் சரிவுக்கு மத்தியில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி

By செய்திப்பிரிவு

கயானா: இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியையும் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 2-வது ஆட்டம் கயானாவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய திலக் வர்மா அரை சதம் அடித்தார். அவர் 51 ரன்களில் அவுட்டானார். மற்றவர்களில் இஷான் கிஷன் 27, ஹர்திக் பாண்ட்யா 24 ரன்கள் எடுத்திருந்தனர்.

இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா முதல் ஓவரே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். முதல் பந்தில் பிரண்டன் கிங்கையும் நான்காம் பந்தில் சார்லஸையும் அவுட் ஆக்கினார். கைல் மேயர்ஸும் விரைவாகவே வெளியேறினாலும், நிகோலஸ் பூரன் அதிரடி காண்பித்தார்.

வான வேடிக்கை காண்பித்த அவரின் அதிரடி பேட்டிங்கால் வெஸ்ட் இண்டீஸ் அணி ரன்கள் சேகரிப்பில் தீவிரம் காட்டியது. 40 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து அவர் விக்கெட்டை பறிகொடுத்த பின் அந்த அணி விக்கெட் சரிவை எதிர்கொண்டது. ஹோல்டர், ஹெட்மேயர், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, இந்திய அணியின் கை ஓங்க ஆரம்பித்தது. எனினும், அகேல் ஹொசின் மற்றும் அல்சாரி ஜோசப் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் வெற்றிபெறவும் வைத்தனர்.

இதன்மூலம் 18.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து டி20 தொடரில் இரண்டாவது வெற்றிபெற்றுள்ளது. அகேல் ஹொசின் 16 ரன்களும், அல்சாரி ஜோசப் 10 ரன்களும் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேன்களாக வெற்றிக்கு உதவினர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டும், சஹால் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்