ஆக்லாந்து: பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் 5-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நேற்று நாக் அவுட் சுற்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் - சுவிட்சர்லாந்து அணிகள் ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் மைதானத்தில் மோதின.
இதில் ஸ்பெயின் 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் அடனா பொன்மதி இரு கோல்களும் (5 மற்றும் 36-வது நிமிடங்கள்), ஆல்பா ரெடோண்டோ (17-வது நிமிடம்), லயா கோடினா (45-வது நிமிடம்), ஜெனிபர் ஹெர்மோசோ (70-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். சுவிட்சர்லாந்து அணி சார்பில் எடுக்கப்பட்ட ஒரே ஒரு கோலும் ஸ்பெயினின் கோடினா அடித்த சுய கோல் ஆகும்.
வெலிங்டனில் நடைபெற்ற நாக் அவுட் சுற்றின் மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் - நார்வே அணிகள் மோதின. இதில் ஜப்பான் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. நார்வே அணியின் இங்க்ரிட் சிர்ஸ்டாட் சுய கோல் அடித்தார். இதனால் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அடுத்த 2-வது நிமிடத்தில் நார்வே அணியின் ரீடென் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. 50-வது நிமிடத்தில் ரிசா ஷிமிஷுவும், 81-வது நிமிடத்தில் ஹினாடா மியாஸவாவும் கோல் அடிக்க ஜப்பான் அணி 3-1 என வலுவான முன்னிலையை பெற்றது. நார்வே அணி கடைசி வரை போராடியும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது.
ஜப்பான் அணி 2015-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இம்முறை அந்த அணி இதுரை 14 கோல்கள் அடித்துள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் ஜப்பானி அணி ஒரேதொடரில் அதிக கோல்கள் அடிப்பது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் 2011-ம் ஆண்டு தொடரில் அந்த அணி 12 கோல்கள் அடித்திருந்தது. நார்வே அணி கடைசியாக பங்கேற்ற 3 தொடர்களில் 2-வது முறையாக நாக் அவுட் சுற்றுடன் வெளியேறி உள்ளது. 2015-ம் ஆண்டு தொடரில் அந்த அணி, இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து நடையை கட்டியிருந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago