சென்னை: ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் மலேசியா - சீனா அணிகள் மோதின. இதில் மலேசியா 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கிய 4வது நிமிடத்தில் சீனாவின் ஷென் சோங் காங் பீல்டு கோல் அடித்தார். இதனால் அந்த அணி அணி 1-0 என முன்னிலை பெற்றது. 11-வது நிமிடத்தில் மலேசியா பதிலடி கொடுத்தது.
பெனால்டி கார்னர் வாய்ப்பில் சாரி பைசல் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. அடுத்த 4-வது நிமிடத்தில் மலேசிய அணி தனது 2-வது கோலை அடித்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்த கோலை அபு கமால் அஸ்ராய் அடித்தார். தொடர்ந்து 45-வது நிமிடத்தில் அபு கமால் அஸ்ராய் பீல்டு கோல் அடித்து அசத்தினார். இதனால் மலேசியா அணி 3-1 என்ற முன்னிலையை நோக்கி நகர்ந்தது. 49-வது நிமிடத்தில் ஃபிர்ஹான் அஷாரி பீல்டு கோல் அடிக்க மலேசியா அணி 4-1 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. ஆட்டம் முடிவடைய 3 நிமிடங்கள் இருந்த நிலையில் மலேசியா அணி மேற்கொண்டு ஒரு கோல் அடித்தது. முடிவில் மலேசியா 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் மலேசியா 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வென்றிருந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago