காமன்வெல்த் போட்டி செய்தித் துளிகள்

வெற்றியோடு தொடங்கியது இந்தியா

காமன்வெல்த் போட்டியின் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை தோற்கடித்து வெற்றியோடு தொடங்கியுள்ளது. இந்தியத் தரப்பில் வி.ஆர்.ரகுநாத் (20-வது நிமிடம்), ரூபிந்தர் பால் சிங் (42-வது நிமிடம்), கோவிந்தர் சிங் சான்டி (47-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

பாட்மிண்டன்: இந்தியா வெற்றி

காமன்வெல்த் பாட்மிண்டன் போட்டியின் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய அணி அடுத்தடுத்து இரு வெற்றிகளைப் பெற்றுள்லது. முதல் ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் கானாவை தோற்கடித்த இந்தியா, பின்னர் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் உகாண்டாவை தோற்கடித்தது.

கனடாவை வீழ்த்தியது இந்தியா

காமன்வெல்த் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 4-2 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்து வெற்றியோடு தொடங்கியுள்ளது. இந்திய அணி தரப்பில் ஜேஸ்பிரித் கௌர் 2 கோல்களையும், ராணி ராம்பால், பூனம் ராணி ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். நாளை நடைபெறும் ஆட்டத்தில் நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE