ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் ஹென்றி செரேனோ தலைமையிலான சென்னையின் எப்சி அணி இன்று தனது முதல் ஆட்டத்தில் எப்சி கோவா அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 4-வது சீசன் போட்டிகள் நேற்று முன்தினம் கொச்சியில் கோலாகலமாக தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்நிலையில் தொடரின் 3-வது நாளான இன்று சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் 2015-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சென்னையின் எப்சி தனது முதல் ஆட்டத்தில் எப்சி கோவா அணியை எதிர்கொள்கிறது.
இரு அணிகளுக்குமே கடந்த சீசன் மோசமாக அமைந்தது. சென்னையின் எப்சி 7-வது இடத்தையும், கோவா 8-வது இடத்தையும் பிடித்தன. இதனால் கடந்த சீசனை மறந்துவிட்டு இரு அணிகளும் புதிய தொடக்கத்துக்கு தயாராகி உள்ளன. சென்னை அணி முதல் 3 சீசனிலும் இத்தாலியை சேர்ந்த மார்கோ மெட்ராஸியின் பயிற்சியில் விளையாடிய நிலையில் இந்த சீசனில் இங்கிலாந்தை சேர்ந்த ஜான் கிரகோரியின் பயிற்சியின் கீழ் களம் காண்கிறது. இதேபோல் கோவா அணியும் சிகோவுக்கு பதிலாக புதிய பயிற்சியாளரான ஸ்பெயினைச் சேர்ந்த செர்ஜியோ லோபெரா பயிற்சியின் கீழ் விளையாட உள்ளது.
ஜான் கிரகோரி கூறும்போது, ‘‘நாங்கள் சிறந்த வடிவத்தில் உள்ளோம். அணியில் 25 வீரர்கள் உள்ளனர். துரதிருஷ்டவசமாக அணியில் 4 இந்திய வீரர்கள், 3 வார காலம் எங்கள் குழுவில் இல்லை. தேசிய அணிக்கான போட்டிகளில் அவர்கள் விளையாட சென்றிருந்தனர். இது எங்களது திட்டங்களை பாதித்தது. ஆனாலும் போட்டிக்கான முன் தயாரிப்புகள் சிறப்பாக அமைந்தது.
முதல் ஆட்டத்தை எப்படி சிறப்பாக தொடங்குகிறோம் என்பதில் தான் அனைத்தும் இருக்கிறது.
தேசிய அணிக்காக விளையாடி விட்டு திரும்பி வந்துள்ள நடுக்கள வீரரான கெர்மன்பிரீத் காயம் அடைந்துள்ளதால் கோவா அணிக்கு எதிராக அவர் களமிறங்க வாய்ப்பில்லை. 2-வது ஆட்டத்தில் கெர்மன்பிரீத் அணிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. இம்முறையும் ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்” என்றார்.
கோவா அணியின் பயிற்சியாளர் செர்ஜியோ லோபெரா கூறும்போது, “புதிய சீசனை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம். அணியின் ஒட்டுமொத்த கலவை மகிழ்ச்சி அளிப்பதாகவே உள்ளது. போட்டிக்கான முன் தயாரிப்புகளும் சிறப்பாக அமைந்தது. கால்பந்து போட்டிகளுக்கான பாணியை வீரர்கள் தங்களுக்கு தகுந்தபடி கடைபிடிக்க வேண்டும். இது சிறந்த முடிவுகளைத் தரும்” என்றார்.
சென்னை அணியில் போர்ச்சுக்கலை சேர்ந்த ஹென்றிக் செரேனோ, பிரேசிலை சேர்ந்த நடுக்கள வீரர் ரபேல் அகுஸ்டோ, ஸ்பெயினின் பின்கள வீரர் இனிகோ கால்டிரான் ஆகியோர் மீதும் இந்தியாவைச் சேர்ந்த ஜெஜெ லால்பெகுலா, கோல்கீப்பர் கரன்ஜித் சிங், ஜெர்ரி லால்ரின்ஸூலா, அனிருத் தபா, தோய் சிங், தனபால் கணேஷ் ஆகியோர் மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இரு அணிகளும் ஐஎஸ்எல் தொடரில் 6 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளன.
சென்னை - கோவா
நேரம்: மாலை 5.30
இடம்: சென்னை
பெங்களூரு - மும்பை
இடம்: பெங்களூரு
நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago