சென்னை: இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ளார் தமிழகத்தை சேர்ந்த குகேஷ். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் (லைவ் ரேட்டிங்) இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை அவர் முந்தியதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார்.
உலக தரவரிசை பட்டியலில் 2755.9 ரேட்டிங் உடன் தற்போது 9-வது இடத்தில் உள்ளார். இது லைவ் ரேட்டிங் ஆகும். விஸ்வநாதன் ஆனந்த் 2754.0 ரேட்டிங் உடன் உள்ளார். குகேஷுக்கு விஸ்வநாதன் ஆனந்த் தான் ரோல் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 1-ம் தேதி அடுத்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதுவரை குகேஷ், ஆனந்தை விட தொடர்ந்து ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்தால், 1986-க்கு பிறகு உலகத் தரவரிசையில் ஆனந்தை முந்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 வயதான குகேஷ் சென்னையை சேர்ந்தவர். இந்திய கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவர். கடந்த 2019-ல் இந்த கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை அவர் பெற்றார். 16 வயதில் உலக சாம்பியனை வீழ்த்தி சாதனை படைத்தார். மிக இளம் வயதில் 2750 லைவ் ரேட்டிங்கை எட்டிய வீரர் என்ற சாதனையை அண்மையில் படைத்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago