நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்குக் காரணம் அந்த அணி வீரர்கள் தேவையற்ற ஷாட்களை ஆடியதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
மேலும், தன் சதம், டெஸ்ட் கிரிக்கெட் மீதான தன் தீராத நேயம் ஆகியவை பற்றியும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
“தனிப்பட்ட முறையில் இந்த நூறு எனக்கு முக்கியமானது. கிட்டத்தட்ட 500 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறேன். இந்த வாய்ப்புக்காகக் காத்திருந்தேன், அதனால் ரன்கள் ஸ்கோர் செய்ய முடிந்தது எனக்கு திருப்தியைத் தருகிறது. நீண்ட நாள் காத்திருப்புக்குப் பலன் கிட்டியுள்ளது.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, இதே மைதானத்தில்தான் நான் காயமடைந்தேன், பிறகு 3 ஆண்டுகளுக்குப் பிறகே முதல் டெஸ்ட் போட்டியில் ஆட முடிந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய லெவனில் இடம்பிடிப்பது சாதாரணமல்ல, எப்போதும் அதற்காக கவனமேற்கொண்டேயிருக்க வேண்டும். களத்தில் இருக்கும் போது அடித்து நொறுக்க வேண்டுமா அல்லது எப்படி இன்னிங்ஸை கொண்டு செல்வது என்பதில் தெளிவு இருக்க வேண்டும்.
6 பவுலர்கள் 5 பேட்ஸ்மென்கள் போன்ற அணிச்சேர்க்கை விவகாரங்கள் முழுதும் கேப்டனையே சார்ந்தது.
வாழ்க்கையில் எந்தக் கட்டமும் திருப்தி இருக்கவே இருக்காது, 10,000 ரன்கள் அடித்தால் கூட 15,000 ரன்கள் அடித்திருக்கலாமே என்று தோன்றும், நம்மைச் சுற்றியுள்ளவர்களும் அப்படித்தான் கூறுவார்கள், எனவே இதுதான் உலகம், இதில்தான் நாம் வாழ்கிறோம்.
என்னைப்பொறுத்தவரையில் ஒருகட்டத்தில் என்னால் இனி நடக்க முடியுமா என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் காயத்தின் தீவிரம் இருந்தது. இப்போது மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிஉள்ளேன் எனவே எனக்கு இது மகிழ்ச்சியையே தருகிறது. மகிழ்ச்சிக்கும் மேலான திருப்தியைத் தருகிறது. அனுபவமில்லாத போது அணிக்குள் நுழைந்த தருணத்தில் ஏகப்பட்ட விஷயங்களை மண்டைக்குள் ஏற்றிக் கொண்டு சிக்கலாக்கி கொள்வேன். ஆனால் இனி அப்படியில்லை.
இப்போது இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் முக்கியமாக தென் ஆப்பிரிக்கா தொடரை கவனத்தில் கொண்டிருக்கிறேன்.
13 டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் ஆடியதில் பவுலர்கள் பங்களிப்பு மிகப்பெரியது. இது அவர்களுக்குத் தன்னம்பிக்கையை அளித்துள்ளது. இப்போது அயல்நாட்டில் ஆடப்போகிறோம். இப்போது வீரர்கள் தங்கள் உத்திகளின் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் நாம் விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும், யாரும் நமக்கு விக்கெட்டுகளை கொடுக்க மாட்டார்கள். நாம்தான் திட்டமிட வேண்டும். இதில்தான் பவுலர்கள் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர்.
சீல வேளைகளில் விக்கெட்டுகள் விழாது, அப்போது ரன்களைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். இப்போது பவுலர்கள் அனுபவசாலிகளாகி விட்டனர், எனவே இந்த முறை அயல்நாட்டுத் தொடர்கள் வித்தியாசமாக இருக்கும்.”
இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago