புதுடெல்லி: உலக பாட்மிண்டன் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய், லக்ஷயா சென் ஆகியோர் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
உலக பாட்மிண்டன் தரவரிசை பட்டியலில் வெளியாகி உள்ளது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய் ஓர் இடம் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். அதேவேளையில் லக்ஷயா சென் இரு இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை அடைந்துள்ளார். இருவரும் கடந்த வாரம் நடைபெற்ற ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடரில் அரை இறுதி சுற்று வரை முன்னேற்றம் கண்டிருந்தனர்.
முன்னாள் முதல் நிலை வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் ஓர் இடம் முன்னேறி 19-வது இடத்தை பிடித்துள்ளார். தேசிய சாம்பியனான மிதுன் மஞ்சுநாத் 4 இடங்கள் முன்னேறி 50-வது இடத்தில் உள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற பி.வி.சிந்து 17-வது இடத்தில் தொடர்கிறார். ஆடவர் இரட்டையர் பிரிவில் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 2-வது இடத்தில் நீடிக்கிறது. மகளிர் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் இரு இடங்கள் முன்னேறி 17-வது இடத்தை அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago