புதுடெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய கால்பந்து அணி தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் சுனில் சேத்ரி, சந்தேஷ் ஜிங்கன், குருபிரீத் சிங் சாந்து உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
சீனாவின் ஹாங்சோவ் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இந்நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய கால்பந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்) இதை அறிவித்துள்ளது.
கடந்த 2018-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் கால்பந்து பிரிவுக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை. இதைத் தொடர்ந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணி விளையாடவுள்ளது.
» நூறு நாள் வேலை: பணியாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
» நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு: தமிழ்நாடு உணர வேண்டிய உண்மைகள்
இந்திய அணி விவரம்
கோல்கீப்பர்கள்: குர்பிரீத் சிங் சாந்து, குர்மீத் சிங், தீரஜ் சிங் மோராங்தெம்.
டிஃபன்டர்கள்: சந்தேஷ் ஜிங்கன், அன்வர் அலி, நரேந்தர் கெலாட், லால்சங்நுங்கா, ஆகாஷ் மிஷ்ரா, ரோஷன் சிங், ஆசிஷ் ராய்,
மிட்ஃபீல்டர்கள்: ஜீக்சன் சிங் தவுனஜாம், சுரேஷ் சிங் வாங்ஜாம், அபுயா ரால்டே, அமர்ஜித் சிங் கியாம், கே.பி.ராகுல், நரேம் மகேஷ் சிங்.
ஃபார்வர்ட்: சிவசக்தி நாராயணன், ரஹிம் அலி, சுனில் சேத்ரி, அனிக்கெட் ஜாதவ், விக்ரம் பர்தாப் சிங், ரோஹித் தானு.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
25 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago