டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்கள் வீழ்த்துவேன் என்ற நம்பிக்கை உள்ளதாக அஸ்வின் தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட்டில் 8 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் விரைவாக 300 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின்.
ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் டெனிஸ் லில்லி 56 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை எட்டி நீண்ட காலமாக சாதனையை தன் வசம் வைத்திருந்தார். இந்நிலையில் 54 டெஸ்ட்டில் அஸ்வின் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றி லில்லியின் சாதனையை 36 வருடங்களுக்குப் பிறகு முறியடித்துள்ளார் அஸ்வின்.
அதிலும் சிறப்பம்சமாக லில்லி 300 விக்கெட்கள் சாதனையை நிகழ்த்திய நவம்பர் 27-ம் தேதியே அவரது சாதனையை தகர்த்துள்ளார் அஸ்வின். லில்லி 1981-ம் ஆண்டு 300 விக்கெட்களை எட்டியிருந்தார்.
அஸ்வினுக்கு அடுத்த இடத்தில் டெனிஸ் லில்லி 56 டெஸ்ட் போட்டிகளிலும், முரளிதரன் 58 டெஸ்ட் போட்டிகளிலும் ஹாட்லி, மார்ஷல், ஸ்டெய்ன் ஆகியோர் 61 டெஸ்ட் போட்டிகளிலும் 300 விக்கெட்கள் என்ற மைல் கல்லை எட்டியுள்ளனர்.
300 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற வகையில் முத்தையா முரளிதரனின் சாதனையையும் கடந்துள்ளார் அஸ்வின். முரளிதரன் 58 போட்டிகளில் 300 விக்கெட்கள் கைப்பற்றியிருந்தார். மேலும் 300 விக்கெட்டுகள் என்ற மைல் கல்லை எட்டிய 8-வது சுழற்பந்து வீச்சாளராவார் அஸ்வின். இந்திய வீரர்களில் அனில் கும்ப்ளே (619), கபில் தேவ் (434), ஹர்பஜன் சிங் (417), ஜாகீர்கான் (311) ஆகியோருக்குப் பிறகு 300 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை புரிந்த வீரராக அஸ்வின் திகழ்கிறார்.
அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் 31 வயதான அஸ்வின் இதுவரை 502 விக்கெட்கள் வேட்டையாடி உள்ளார். 111 ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்களும், 46 டி20 போட்டிகளில் 52 விக்கெட்களும் அஸ்வின் கைப்பற்றி உள்ளார்.
இந்த ஆண்டில் அஸ்வின் டெஸ்ட்டில் மட்டும் 50 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். இந்த சாதனையை அவர் தொடர்ச்சியாக 3-வது முறையாக படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஷேன் வார்ன், முரளிதரன் ஆகியோர் இதே சாதனையை படைத்துள்ளனர்.
அஸ்வின் கூறும்போது, “இந்த 300 விக்கெட்களை இருமடங்காக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுவரை 54 போட்டிகளில் விளையாடி உள்ளேன். சுழற்பந்து வீச்சு எளிதானது அல்ல. தற்போது கம்பீரமாக எழுந்து நிற்பது போல் தெரியும். ஆனால் இதன் பின்னால் அதிகம் இருக்கிறது” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago