ராயுடுவை முற்றுகையிட்ட அமராவதி விவசாயிகள்

By என். மகேஷ்குமார்

அமராவதி: கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடுவை நேற்று அமராவதி விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த அம்பத்தி ராயுடு விரைவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவர் நேற்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்க அமராவதிக்கு வந்தார். அப்போது, அமராவதியே தலைநகரமாக இருக்க வேண்டுமென கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும், அமராவதிக்கு நிலம் வழங்கிய விவசாய சங்கத்தினர் அம்பத்தி ராயுடுவின் காரை வழிமறித்து அவரை இறங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பின்னர், அவர் காரில் இருந்து இறங்கியதும், அமராவதிக்கு ஆதரவு அளித்து போராட்ட மேடைக்கு வரும்படி அழைத்தனர். அதற்கு அம்பத்தி ராயுடு புன்னகையுடன் மறுத்து விட்டார். அமராவதிக்கு தான் தனது ஆதரவு என்று கூறி, ஜெய் அமராவதி என முழக்கமிட வற்புறுத்தினர்.

அதற்கும் அவர் மறுத்து விட்டு, கண்டிப்பாக அமராவதி தான் ஆந்திராவின் நிரந்தர தலைநகரமாக இருக்கும் என கூறிவிட்டு, காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார். இதன் காரணமாக அமராவதி போராட்ட பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்