காயம் காரணமாக நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்து வந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். அயர்லாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. தற்போது நடைபெற்று வரும் 3 ஒருநாள் தொடர் போட்டிகளில் 1-1 என்ற நிலையில் இரண்டு அணிகளும் சமனில் உள்ளன. கடைசிப்போட்டி நாளை நடைபெறுகிறது. தொடர்ந்து, ஆகஸ்ட் 3-ம் தேதி இரு அணிகளுக்கிடையிலான டி20 தொடர் நடைபெறுகிறது.
இந்தத் தொடர் முடிந்ததும் இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 தொடர் போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறது. இத்தொடர் ஆகஸ்ட் 18 முதல் 23 ஆம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக பும்ராவும், துணைக் கேப்ண்டாக ருதுராஜ் கெய்க்வாட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி விவரம்: ஜஸ்பரீத் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஷ்வால், திலக் வர்மா,ரின்கு சிங், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago