புதுடெல்லி: சீனாவில் நடைபெற்று வரும் உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியின் கலப்பு வில்வித்தை அணிப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
சீனாவின் செங்டு நகரில் உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று கலப்பு வில்வித்தை அணிப்பிரிவு போட்டிகள் நடைபெற்றன.
இதில் இந்திய அணியின் சார்பில் அமன் சைனி, பிரகதி ஜோடி தங்கம் வென்றது.
உலக பல்கலைக்கழக விளையாட்டில் இந்தியா பெறும் 4-வது தங்கப் பதக்கமாகும் இது. இதுவரை 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.
நேற்று நடைபெற்ற ஆடவர் காம்பவுண்ட் அணிப் பிரிவில் இந்தியாவின் சங்கம்பிரீத் பிஸ்லா,அமன் சைனி, ரிஷப் யாதவ் ஆகியோர் அடங்கிய அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago