புனே: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 4 தொடரில் சென்னை லயன்ஸ் அணியை 7-8 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது கோவா சாலஞ்சர்ஸ் அணி.
இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 4 போட்டிகள் புனேவில் உள்ள ஷிவ்சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வந்தன. இதன் இறுதிப் போட்டியில் நேற்று சென்னை லயன்ஸ் - கோவா சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை அணியின் பெனடிக் டூடா, கோவா அணியின் ஹர்மீத் தேசாயை எதிர்த்து விளையாடினார். இதில் உலகத் தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள டூடாவை 1-2 (11-6, 4-11, 8-11) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் ஹர்மீத் தேசாய்.
2-வதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் சென்னையின் யாங்ஸி லியு, கோவாவின் சுதாசினியுடன் மோதினார். இதில் யாங்ஸி லியு 2-1 (7-11, 11-6, 11-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். முதல் செட்டை சுதாசினி 11-7 என கைப்பற்றினார். 2-வது செட்டில் மீண்டுவந்த யாங்ஸி லியு 11-6 என தன்வசப்படுத்தினார். வெற்றியை தீர்மானித்த 3-வது செட்டில் சிறப்பாக செயல்பட்ட யாங்ஸி லியு 11-5 என நிறைவு செய்தார்.
» சிந்தனை வெளியைக் காட்டும் சாளரங்கள் - 8 | கார்ல் ஷ்மிட்: அரசியலும் முரணரசியலும்
» டேட்டா ஸ்டோரி| இந்தியாவும் அதன் மாநிலங்களும்: ஸ்டார்ட் அப்
3-வதாக நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் சென்னையின் ஷரத் கமல், யாங்ஸி லியு ஜோடி கோவாவின் ஹர்மீத் தேசாய், சுதாசினி ஜோடியை எதிர்கொண்டது. இதில் ஷரத் கமல், யாங்ஸி லியு ஜோடி 2-1 (11-7,11-9,10-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஷரத் கமல் ஜோடி 11-7 என கைப்பற்றியது. 2-வது செட் மிக நெருக்கமாக சென்றது. 9-9 என சமநிலையில் இருந்த நிலையில் ஷரத் கமல், யாங்ஸி லியு ஜோடி தங்களது அனுபவத்தால் 11-9 என கைப்பற்றியது. கடைசி செட்டில் ஷரத் கமல் ஜோடி விரைவாக புள்ளிகளை குவித்து 7-2 முன்னிலை பெற்றது. ஆனால் ஹர்மீத் தேசாய் ஜோடி மீண்டு வந்து 8-8 என சமநிலைக்கு கொண்டு வந்தது. கோல்டன் புள்ளி வரை சென்ற இந்த செட்டை ஹர்மீத் தேசாய், சுதாசினி ஜோடி 11-10 என கைப்பற்றியது.
4-வதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை அணியின் ஷரத் கமல், உலகத் தரவரிசையில் 47-வது இடத்தில் உள்ள கோவாவின் ஆல்வரோ ரோபிள்ஸுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் 32-வது இடத்தில் உள்ள ஷரத் கமல் 0-3 (8-11, 8-11, 10-11)என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
முதல் செட்டில் தொடக்கத்தில் 5-1 என ஆல்வரோ ரோபிள்ஸ் முன்னிலை வகித்தார். இதன் பின்னர் ஷரத் கமல் 7-9 என நெருங்கி வந்தார். ஆனால் ஆல்வரோ ரோபிள்ஸ் மேற்கொண்டு இரு புள்ளிகளை சேர்த்து 11-8 என நிறைவு செய்தார். 2-வது செட்டிலும் ஆல்வரோ ரோபிள்ஸ் ஆதிக்கம் செலுத்தினார். இதனால் அவர், விரைவிலேயே 7-1 என முன்னிலை பெற்றார். முடிவில் 11-8 என தன்வசப்படுத்தினார். கடைசி செட் 9-9 என நெருக்கமாக சென்றது. பின்னர் 10-10 என கோல்டன் புள்ளி வரை சென்ற இந்த செட்டை ஆல்வரோ ரோபிள்ஸ் 11-10 என வென்றார். ஆல்வரோபிள்ஸின் வெற்றியால் கோவா அணி 7-5 என முன்னிலை வகித்தது.
கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை அணியின் சுதிர்தா முகர்ஜி, கோவா அணியின் ரீத் ரிஷ்யாவை எதிர்கொண்டார். இதில் 3 செட்டையும் முழுமையாக வென்றால் மட்டுமே சென்னை அணியால் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க முடியும் என்ற நெருக்கடி ஏற்பட்டது.
முதல் செட்டை சுதிர்தா முகர்ஜி 11-7 என கைப்பற்றினார். 2வது செட்டில் தொடக்கத்தில் சரிவை சந்தித்தாலும் 10-10 என கோல்டன் புள்ளி வரை எடுத்துச் சென்று 11-10 என நிறைவு செய்தார் சுதிர்தா முகர்ஜி. இதனால் இரு அணிகள் இடையிலான மோதல் 7-7 என சமநிலையை எட்டியது. பரபரப்பாக அமைந்த கடைசி செட்டில் ரீத் ரிஷ்யா 11-6 என சுதிர்தா முகர்ஜியை தோற்கடிக்க கோவா சாலஞ்சர்ஸ் அணி 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
அரை இறுதிப் போட்டியிலும் அசத்தியிருந்த சென்னையை சேர்ந்த ரீத் ரிஷ்யா இறுதிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடி கோவா அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்களிப்பு செய்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago