ஓவலில் நடைபெறும் ஆஷஸ் தொடர் 5வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான நேற்று இங்கிலாந்து ஒரே நாளில் 389 ரன்களை விளாசியுள்ளது. ரன் ரேட் முதலில் ஓவருக்கு 10 ரன்கள் என்ற நிலையிலிருந்து சீராக 5 ரன்களுக்கும் மேல் இருந்தது, கடைசியில் விக்கெட்டுகள் சரிந்ததால் ரன் ரேட் 4.86 என்று உள்ளது.
டெஸ்ட் போட்டியில் ரன் ரேட்டை பேச வைத்துள்ள பாஸ்பால் இங்கிலாந்து அதிரடி ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு சாவுமணி அடித்ததோடு புதிய தலைமுறை கேப்டன் பென் ஸ்டோக்ஸின் உத்திகள் அதே புதிய தலைமுறை கேப்டன் பாட் கமின்ஸை என்ன செய்வதென்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது!
கமின்ஸின் மிகப்பெரிய பிரச்சனை என்னவெனில் பவுண்டரி பந்துகளை குறைக்க முடியவில்லை, பவுண்டரி பந்துகள் அதிகம் விழுகின்றன, இதன் எண்ணிக்கையைக் குறைத்து கொஞ்சம் அட்டாக், கொஞ்சம் பரவலான களவியூகம் அமைத்து கட்டுக்கோப்பாக வீச வேண்டும் ஆஸ்திரேலிய பவுலர்கள். பவுண்டரி பந்துகளைக் கட்டுப்படுத்தத் தவறுவதால் பாட் கமின்ஸ் அத்தகைய பவுண்டரி பந்துகளுக்குத் தகுமாறு களவியூகத்தை பரவலாக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார். இதனை இங்கிலாந்து சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறது.
நல்ல பவுலர்களைக் கொண்ட ஆஸ்திரேலியா மட்டையைக் கடந்து ஊடுருவும் பவுலிங்கை வீசக்கூடியவர்கள் ரன் கட்டுப்படுத்தும் உத்திக்குச் செல்ல வேண்டியுள்ளது, இதனைச் செய்ய வைத்தவர்கள் இங்கிலாந்து, முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஷார்ட் பிட்ச் பவுலிங்கை வைத்து எப்படியோ சமாளித்த கமின்ஸ் அதன் பிறகு இங்கிலாந்து ஷார்ட் பிட்ச் பவுலிங்கை எதிர்கொண்டு அடிக்கத் தொடங்கிய பிறகு வேறு உத்தியைக் கடைப்பிடித்திருக்க வேண்டும். மட்டைப் பிட்சில் நேதன் லயன் போன்ற நல்ல ஸ்பின்னர் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்குப் பெரும் பின்னடைவு.
பேட்டிங்கில் வார்னர் போன்ற பெரும்தலைகளே ஒன்றும் செய்ய முடியவில்லை. லபுஷேன் தன் பார்மை கண்டுப்பிடிப்பதில் மும்முரமாக இருப்பதால் 7 ரன்களுக்கு 82 பந்துகளை எடுத்துக் கொள்கிறார். மொத்தத்தில் வலுவான அணி தன்னம்பிக்கை இல்லாமல் ஆடி சொதப்புகிறது. அவ்வளவு வலுவில்லாத இங்கிலாந்து அணி வெறும் தன்னம்பிக்கையிலேயே ஆஸ்திரேலியாவை மடித்து வருகின்றது.
முதல் 2 டெஸ்ட் போட்டியில் தோற்றவுடனேயே இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அடுத்த 3 டெஸ்ட்களை வென்று 3-2 என்று வெல்வோம் என்றார். அதற்கான முன்னெடுப்பில்தான் லீட்சில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினர். மார்க் உட் பிரமாதமாக வீசினார். ஹாரி புரூக் இலக்கை அதிரடியாக விரட்டிக் கொடுத்தார். ஓல்ட் டிராபர்ட் டெஸ்ட்டில் 592 ரன்களை குறைந்த ஓவர்களில் விளாசித்தள்ளினார்கள் இங்கிலாந்து அணியினர். துரதிர்ஷ்ட மழையால் ஆஸ்திரேலியா தப்பிப் பிழைத்தது.
இப்போது இந்த டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா தோல்வியின் பிடியில் உள்ளது. திங்கட்கிழமை மழை எதிர்பார்க்கப்படுகிறது என்பதால் இன்றே இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆஸ்திரேலிய பந்து வீச்சு இப்படி வரலாறு காணாத அடி வாங்கியதில்லை. ஆஸ்திரேலிய பவுலர்களின் சிக்கன விகிதத்தைப் பார்த்தால் இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்பது போல்தான் உள்ளது:
மிட்செல் ஸ்டார்க் 23 விக்கெட்; சிக்கன் விகிதம் ஓவருக்கு 4.85 ரன்கள்
பாட் கமின்ஸ் 18 விக்கெட்; சிக்கன விகிதம் 4.27.
ஜாஷ் ஹேசில்வுட் 16 விக்கெட்; சிக்கன விகிதம் 4.56
ஸ்காட் போலண்ட் 2 விக்கெட்; சிக்கன விகிதம் 4.91.
டாட் மர்பி 6 விக்கெட்; சிக்கன விகிதம் 4.82.
மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்; சிக்கன விகிதம் 4.91.
கேமரூன் கிரீன் 5 விக்கெட்; சிக்கன விகிதம் 5.14.
நேதன் லயன் 9 விக்கெட்; சிக்கன விக்தம் 4.00
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago