ஆஸி.யுடன் கடைசி டெஸ்ட் - இங்கிலாந்து அணி 377 ரன்கள் முன்னிலை

By செய்திப்பிரிவு

லண்டன்: ஆஸ்திரேலியாவுடனான ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து அந்த அணி 377 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் கடந்த 27-ம் தேதி இந்த டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா 295 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 12 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்நிலையில் நேற்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. அப்போது இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸாக் கிராவ்லி, பென் டக்கெட் ஆகியோர் அபாரமாக ஆடி ரன்களைக் குவித்தனர். பென் டக்கெட் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மிட்செல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து விளையாட வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 67 பந்துகளில் 42 ரன்களைச் சேர்த்து டாட் மர்பி பந்தில் வீழ்ந்தார். ஸாக் கிராவ்லி 76 பந்துகளில் 73 ரன்களை எடுத்த நிலையில், பாட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஹாரி புரூக் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தார். தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 61 ரன்களும், பேர்ஸ்டோ 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

இதன்பின் தொடர்ந்து விளையாடிய அந்த அணிக்கு ஜோ ரூட் 91 ரன்களும், பேர்ஸ்டோ 78 ரன்களும் சேர்த்து அவுட் ஆக, 9 விக்கெட்களை இழந்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 377 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்