புனே: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 4-ன் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் 8-3 என்ற கணக்கில் புனேரி பல்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் கோவா சாலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது சென்னை லயன்ஸ்.
அல்டிமேட் டேபிள்டென்னிஸ் சீசன் 4 போட்டிகள் புனேவில் உள்ள ஷிவ்சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகின்றன. இதன் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நேற்று சென்னை லயன்ஸ் - புனேரி பல்தான் அணிகள் மோதின. இதில் முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் அணியின் வீரரும் உலகத்தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ளவருமான பெனடிக்ட் டூடா, புனேரி பல்தான் வீரரும்உலகத் தரவரிசையில் 21 -வது இடத்தில் உள்ளவருமான ஓமர் அஸாரை எதிர்த்து விளையாடினார்.
இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பெனடிக் டூடா 3-0 (11-5, 11-7, 11-6) என்ற செட் கணக்கில் ஓமர் அஸாரை தோற்கடித்தார். முதல் செட்டில் பெனடிக் டூடா தொடக்கத்தில் 4-5 என பின் தங்கியிருந்தார். ஆனால் அதன் பின்னர் ஓமர் அஸாரை மேற்கொண்டு ஒரு புள்ளி கூட சேர்க்கவிடாமல் தொடர்ச்சியாக 7 புள்ளிகள் குவித்து 11-5 என முதல் செட்டைவசப்படுத்தினார். 2-வது செட் சற்று நெருக்கமாக சென்றது. ஆனால் ஆக்ரோஷமாக விளையாடிய பெனடிக் டூடா அதை 11-7 என கைப்பற்றினார். கடைசி செட்டிலும் அசத்திய பெனடிக் டூடா 11-6 நிறைவு செய்தார்.
2-வது ஆட்டம் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்றது. இதில் சென்னை அணியின் யாங்ஸி லியு, புனே அணியின் ஹனாமாடெலோவாவுடன் மோதினார். இதில் யாங்ஸி முதல் செட்டை 3-11 என இழந்தார். 2-வது செட்டில் 5-4 முன்னிலையில் இருந்தயாங்ஸி முடிவில் 11-8 என தன்வசப்படுத்தினார். வெற்றியை தீர்மானித்த 3-வது செட்டை யாங்ஸி 11-7 என கைப்பற்றி அசத்தினார். முடிவில் யாங்ஸி லியு 2-1 (3-11, 11-8, 11-7) என்ற கணக்கில் 57-ம் நிலை வீராங்கனையான ஹனா மாடெலோவாவை வீழ்த்தினார்.
» ‘எப்போதும் ஆக்ரோஷஆட்டம்தான்’ - அல்டிமேட் டேபிள் டென்னிஸில் அசத்தும் சென்னை பொண்ணு ரீத் ரிஷ்யா
3-வது ஆட்டம் கலப்பு இரட்டையர் பிரிவில் நடைபெற்றது. இதில் சென்னை அணியின் ஷரத் கமல், யாங்ஸி லியு ஜோடியானது புனே அணியின் மனுஷ் ஷா,ஹனா மாடெலோவா ஜோடியை எதிர்கொண்டது. இதில் ஷரத் கமல், யாங்ஸி லியு ஜோடி 2-1 (11-4, 9-11 11-6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் செட்டை ஆதிக்க போக்குடன் 11-4 என கைப்பற்றியது ஷரத் கமல், யாங்ஸி ஜோடி. 2-வது செட்டில் 2-7 என பின்தங்கிய நிலையில் இருந்த ஷரத் ஜோடி 9-9 என சமநிலைக்கு கொண்டு வந்தது. ஆனால் தொடர்ச்சியாக செய்த இரு தவறுகளால் இந்த செட்டை 9-11 என இழந்தது ஷரத் கமல் ஜோடி. வெற்றியை தீர்மானித்த கடைசி செட்டை ஷரத் கமல், யாங்ஸி லியு ஜோடி 11-6 என கைப்பற்றி அசத்தியது.
4-வது ஆட்டம் ஆடவர் ஒற்றையர் பிரிவில்நடைபெற்றது. இதில் சென்னையின் ஷரத்கமல், புனேவின் மனுஷ் ஷாவுடன் மோதினார்.இதில் முதல் செட்டில் ஷரத் கமல் 0-4 என பின்தங்கினார். பின்னர் 5-11 என இழந்தார். 2-வது செட்டில் தாக்குல் ஆட்டம் மேற்கொண்ட ஷரத் கமல் 11-5 என தன்வசப்படுத்த ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஏனெனில் சென்னைலயன்ஸ் 8 புள்ளிகளை எட்டியிருந்தது.
நாக் அவுட் சுற்றில் 8 புள்ளிகளை முதலில்எட்டும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இந்த வகையில் சென்னை லயன்ஸ் அணி முதல் 4-வது ஆட்டத்தின் 2-வது செட்டிலேயே 8 புள்ளிகளை குவித்தது. இதன் மூலம் புனேரி பல்தான் அணியை 8-3 என்றகணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குமுன்னேறியது. இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனானசென்னை லயன்ஸ், கோவா சாலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago