டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் அரை இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் லக்சயா சென் முன்னேறியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள லக்சயா சென்னும், 33-வது இடத்தில் உள்ளஜப்பானின் கோகி வத்தனாபேயும் மோதினர்.
இதில் சிறப்பாக விளையாடிய லக்சயா சென் 21-15, 21-19 என்ற புள்ளிகள் கணக்கில் கோகி வத்தனா பேயை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதியில் இந்தோனேசிய வீரர் ஜோனதான் கிறிஸ்டியை எதிர்த்துவிளையாடுவார் லக்சயா சென்.
பிரனோய் தோல்வி: மற்றொரு கால் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரனோய் தோல்வி கண்டார். கால் இறுதிப் போட்டியில் டென்மார்க் வீரர் விக்ஸ்டர் அக்சல்சென் 19-21, 21-18, 21-8 என்ற புள்ளிகள் கணக்கில் பிரனோயை வீழ்த்தினார்.
» இஷான் கிஷன், குல்தீப் யாதவ் அபாரம் - மேற்கு இந்தியத் தீவுகள் அணியை எளிதாக வீழ்த்தியது இந்தியா
» மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டி: ஜடேஜா - குல்தீப் யாதவ் இணைந்து புதிய சாதனை
இந்திய ஜோடி வெளியேற்றம்: ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடியும் தோல்வி கண்டு வெளியேறியுள்ளது.
கால் இறுதிப் போட்டியில் சாத்விக் சிராக் ஷெட்டி ஜோடி 15-21, 25-23, 16-21 என்ற புள்ளிகள் கணக்கில் தைவானின் வாங் சி லீன் - லீ யாங் ஜோடியிடம் வீழ்ந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago