பார்படாஸ்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 23 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டது. அந்த அணியில் ஷாய் ஹோப் ஓரளவு தாக்குப் பிடித்து 43 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினர்.
இதன்பின், 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, சில பரிசோதனைகளை செய்தது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் உடன் இஷான் கிஷன் இறங்கினார். கில், 7 ரன்னில் அவுட்டாக, ஒன்டவுன் வந்த சூர்யகுமார் யாதவ் 19 ரன்களிலும், பாண்ட்யா 5 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
» “இங்கிலாந்து அணிக்காக பரிதாபப்படுகிறேன். ஏனெனில்...” - முன்னாள் ஆஸி. ஸ்பின்னர்
» சென்னையில் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடர் - ஒரே டிக்கெட்டில் 3 போட்டிகளை காணலாம்!
எனினும், இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி 46 பந்தில் ஒரு சிக்சர், 7 பவுண்டரி உள்பட அரை சதமடித்து 52 ரன்கள் சேர்த்து நடையைக்கட்டினார். இதன்பின், ஷர்துல் தாக்குர் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், ஜடேஜா - ரோகித் இணைந்து அணியை வெற்றிபெற வைத்தனர். 7வது வீரராக களமிறங்கிய ரோகித் கடைசி பவுண்டரி அடித்து அணியை வெற்றிபெற வைத்தார்.
இறுதியில், இந்தியா 22.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜடேஜா 16 ரன்கள், ரோகித் சர்மா 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
40 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago