புனே: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 4 போட்டிகள் புனேவில் உள்ள ஷிவ்சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் - தபாங் டெல்லி டிடிசி அணிகள் மோதின. இந்த மோதலில் டெல்லி தபாங் அணி 9-6 என்ற கணக்கில் சென்னை லயன்ஸ் அணியை வீழ்த்தியது.
முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியின் சத்தியன் ஞானசேகரன் 3-0 (11-10, 11-3, 11-6) என்ற செட் கணக்கில் சென்னை லயன்ஸ் அணியின் ஷரத் கமலை தோற்கடித்தார். 2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் அணியின் யாங்ஸி லியு 2-1 (11-8, 8-11, 11-8)என்ற கணக்கில் டெல்லி அணியின் ஸ்ரீஜா அகுலாவை வீழ்த்தினார்.
3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் டெல்லி அணியின் சத்தியன், பார்போரா ஜோடி2-1 (11-7,11-6,7-11) என்ற கணக்கில் சென்னை அணியின் ஷரத் கமல், யாங்ஸி லியு ஜோடியை தோற்கடித்தது. தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை அணியின் பெனடிக்ட் டூடா 3-0 (11-8, 11-6, 11-7) என்ற கணக்கில் டெல்லி அணியின் ஜான் பெர்சனை வீழ்த்தினார்.
கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் டெல்லி அணியின் பார்போரா 2-1 (11-6, 4-11, 11-9) என்ற கணக்கில் சென்னை அணியின் பிராப்தி ஷெனை வென்றார். இந்த ஆட்டத்தின் முடிவில் தபாங் டெல்லி 42 புள்ளிகளுடனும், சென்னை லயன்ஸ் 41 புள்ளிகளுடனும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago