அப்துல் ஷபிக் 201, அகா சல்மான் 132 ரன் விளாசல்: பாகிஸ்தான் 563 ரன் குவிப்பு

By செய்திப்பிரிவு

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3-வது நாள் ஆட்டத்தில் 563 ரன்கள் குவித்தது.

கொழும்பு நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 38.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷபிக் 74, கேப்டன் பாபர் அஸம் 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை பாகிஸ்தான் தொடர்ந்து விளையாடியது.

தனது 4-வது சதத்தை விளாசிய அப்துல் ஷபிக் 326 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் 201 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பாபர் அஸம் 39 ரன்களில் நடையை கட்டினார். சர்ப்ராஸ் அகமது 14 ரன்களில் ரிட்டர்யடு ஹர்ட் முறையில் வெளியேறினார். முதல் டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய சவுத் ஷகில் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.

3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் பாகிஸ்தான் அணி 132 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 563 ரன்கள் குவித்தது. தனது 2-வது சதத்தை கடந்த அகா சல்மான் 148 பந்துகளில் 132 ரன்களும், மொகமது ரிஸ்வான் 37 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் அஷிதா பெர்னாண்டோ 3, பிரபாத் ஜெயசூர்யா 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 397 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள பாகிஸ்தான் அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்