கொழும்பு: இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையே கொழும்பு நகரில் நடைபெற்று வரும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது.
இந்த போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 48.4 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தனஞ்ஜெயா டி சில்வா 57, தினேஷ் சந்திமால் 34, ரமேஷ் மெண்டிஸ் 27, திமுத் கருணரத்னே 19 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் அப்ரார் அகமது 4, நசீம் ஷா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 28.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. இமாம் உல் ஹக் 6, ஷான் மசூத் 51 ரன்னிலும் அஷிதா பெர்னாண்டோ பந்தில் ஆட்டமிழந்தனர்.
அப்துல்லா ஷபிக் 74, கேப்டன் பாபர் அஸம் 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை பாகிஸ்தான் அணி தொடர்ந்து விளையாடியது. 38.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது அப்துல்லா ஷபிக் 87, பாபர் அஸம் 28 ரன்களுடன் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் 2-வது நாள்ஆட்டம் மேற்கொண்டு தொடரப்படவில்லை. 12 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள பாகிஸ்தான் அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago