போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. விராட் கோலி சதம் விளாசிய நிலையில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர்.
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நேற்று முன்தினம் 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய நிலையில் 128 ஓவர்களில் 438 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தனது 29-வது சதத்தை விளாசிய விராட் கோலி 121 ரன்களில் ரன் அவுட் ஆனார். ரவீந்திர ஜடேஜா 152 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து கேமர் ரோச் பந்தில் ஆட்டமிழந்தார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் 25 ரன்களில் ஜேசன் ஹோல்டர் பந்தில் நடையை கட்டினார். ஜெயதேவ் உனத்கட் 7, மொகமது சிராஜ் 0 ரன்னில் வெளியேறினர்.தனது 14 -வது அரை சதத்தை கடந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 78 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி விக்கெட்டாக கேமர் ரோச் பந்தில் போல்டானார். அஸ்வின் அடித்த அரை சதம் இந்திய அணி 400 ரன்களை கடக்க உதவியாக இருந்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் கேமர் ரோச், ஜோமல் வாரிக்கன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இதையடுத்து பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 41 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. டேக்நரைன் சந்தர்பால் 33 ரன்களில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். கிரெய்க் பிராத்வெயிட் 37, கிர்க் மெக்கென்சி 14 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை மேற்கு இந்தியத் தீவுகள் அணி தொடர்ந்து விளையாடியது. கிர்க் மெக்கென்சி 57 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் அறிமுக வீரரான முகேஷ் குமார் பந்தில், இஷான் கிஷனிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
» வங்கதேச அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியை ‘டை’யில் முடித்தது இந்திய மகளிர் அணி
மேற்கு இந்தியத் தீவுகள் அணி 51.4 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. பிராத் வெயிட் 49 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கப்படவில்லை.
உணவு இடைவேளைக்கு பின் 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது. களத்தில் இருந்த பிராத்வெய்ட் மற்றும் மெக்கென்சி ஆட்டத்தை தொடங்கினர். இதில், பிராத்வெய்ட் அரை சதம் அடித்ததுடன் 75 ரன்களில் வெளியேறினார். இதேபோல், மெக்கென்சி 32 ரன்களில் அவுட்டானார்.
தொடர்ந்து, விளையாடிய பிளாக்வுட் 20 ரன்களும், ஜோஷ்வா டா சில்வா 10 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்நிலையில், 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கு இந்திய தீவுகள் அணி 108 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது, அலிக் 37 ரன்களுடனும், ஜேசன் ஹோல்டர் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
51 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago