மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: அமெரிக்கா, இங்கிலாந்து வெற்றி

By செய்திப்பிரிவு

ஆக்லாந்து: பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நியூஸிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘இ’ பிரிவில் உள்ள நடப்பு சாம்பியனான அமெரிக்கா, வியட்நாமை எதிர்த்து விளையாடியது. இதில் அமெரிக்கா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சோபியா ஸ்மித் 14 மற்றும் 45-வது நிமிடத்திலும், லிண்ட்சே ஹோரன் 77-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

நியூஸிலாந்தின் ஹாமில்டன் நகரில் உள்ள வைகாடோ மைதானத்தில் ‘சி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான் - ஸாம்பியா அணிகள் மோதின. இதில் ஜப்பான் 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் ஹினாடா மியாசாவா இரு கோல்களையும் (43, 62-வது நிமிடங்கள்), மினா தனகா (55-வது நிமிடம்), ஜுன் என்டோ (71-வது நிமிடம்), ரிக்கோ யுகி (90+11-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.

பிரிஸ்பன் நகரில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் ஹைதியை வீழ்த்தியது. 29-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் ஜார்ஜியா ஸ்டான்வே கோல் அடித்தார்.

பெர்த் நகரில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் டென்மார்க் - சீனா அணிகள் மோதின. இதில் டென்மார்க் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் 89-வது நிமிடத்தில் அமலி வங்ஸ்கார்ட் கோல் அடித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்