போர்ட் ஆஃப் ஸ்பெயின்: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 84 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57, கேப்டன் ரோஹித் சர்மா 80 ரன்களில் வெளியேறினர். ஷுப்மன் கில் 10, அஜிங்க்ய ரஹானே 8 ரன்களில் நடையைக் கட்டினர்.
விராட் கோலி 87, ஜடேஜா 36 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 180 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இது அவரது 29-வது சதமாக அமைந்தது. ஜடேஜா 105 பந்துகளில் தனது 19-வது அரை சதத்தை கடந்தார். விராட் கோலி 206 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
5-வது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன் இணைந்து விராட் கோலி 159 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து இஷான் கிஷன் களமிறங்கினார். ஜடேஜா 152 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்த நிலையில் கேமர் ரோச் பந்தில் ஜோஷ்வா டி சில்வாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். கிஷன் 25 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து உனத்கட் மற்றும் சிராஜ் ஆட்டமிழந்தனர். அஸ்வின் 78 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 438 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி பேட் செய்து வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது அந்த அணி. தற்போது இந்தியாவை காட்டிலும் 352 ரன்கள் பின்தங்கியுள்ளது.
பிராட்மேன் சாதனை சமன்: வெளிநாட்டு மண்ணில் 2018ம் ஆண்டு டிசம்பருக்கு பின்னர் தற்போதுதான் விராட் கோலி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் இது அவரது 29-வது சதமாக அமைந்தது. இதன் மூலம் அதிக சதங்கள் அடித்துள்ளவர்களின் பட்டியலில் 15-வது இடத்தில் உள்ள டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்துள்ளார் விராட் கோலி. பிராட்மேன் 52 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். விராட் கோலி இந்த மைல்கல்லை 111-வது டெஸ்டில் அடைந்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago