போர்ட் ஆஃப் ஸ்பெயின்: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்திருந்தது.
இந்திய அணியில் ஷர்துல் தாக்குருக்கு பதிலாக முகேஷ் குமார் அறிமுக வீரராக களமிறங்கினார். மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் ரேமன் ரெய்பர் நீக்கப்பட்டு கிர்க் மெக்கென்சி அறிமுக வீரராக களமிறக்கப்பட்டார். 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்தியா.
இந்த போட்டி இரு அணிகளுக்கும் இடையிலான 100-வது போட்டியாக அமைந்தது. அதேவேளையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு இந்த போட்டி சர்வதேச அரங்கில் 500-வது ஆட்டமாக அமைந்தது. பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ரோஹித் சர்மா ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது.
இருவரும் முதல் விக்கெட்டிற்கு 139 ரன்கள் சேர்த்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 74 பந்துகளில், 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். சுப்மன் கில், 10 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோஹித் சர்மா 143 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 80 எடுத்து ஆட்டமிழந்தார். ரஹானே, 8 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் 5-வது விக்கெட்டிற்கு இணைந்த கோலி மற்றும் ஜடேஜா இணைந்து 106 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இது இந்திய அணிக்கு முக்கியமான கூட்டணியாக அமைந்தது. கோலி, 161 பந்துகளை எதிர்கொண்டு, 8 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்துள்ளார். சதத்தை நெருங்கும் வாய்ப்பு அவருக்கு பிரகாசமாக உள்ளது. ஜடேஜா, 84 பந்துகளில் 36 ரன்கள் எடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago