மகளிர் உலகக் கோப்பை கால்பந்து | நியூஸிலாந்துக்கு வரலாற்று வெற்றி

By செய்திப்பிரிவு

ஆக்லாந்து: பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. நியூஸிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள நியூஸிலாந்து, 1995-ம் ஆண்டு சாம்பியனான நார்வே அணியை எதிர்கொண்டது.

இதில் நியூஸிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் ஹன்னா வில்கின்சன் 48-வது நிமிடத்தில் கோல் அடித்தார். உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் நியூஸிலாந்து அணியின் முதல் வெற்றியாக இது அமைந்தது.

இதற்கு முன்னர் 5 முறை உலகக் கோப்பை தொடரில் விளையாடிய நியூஸிலாந்து அணி 15 ஆட்டங்களில் ஒன்றில் கூட வெற்றியை பெற்றது இல்லை. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா, அயர்லாந்தை எதிர்கொண்டது. இதில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 52-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஸ்டெஃப் கேட்லி கோலாக மாற்றி அசத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்