காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 365 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் பாகிஸ்தான் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
131 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டியபோது நேற்று 48/3 என்று தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் ஆட்டம் முடிந்து இன்று களமிறங்கியது. தேவைப்படும் 83 ரன்களை கொஞ்சம் தட்டுத்தடுமாறி இழுத்தடித்து எடுத்து வெற்றி பெற்றது பாகிஸ்தான். ஆட்டம் தொடங்கியபோது தன்னம்பிக்கையுடன் முதல் பந்தையே பவுண்டரி விளாசித் தொடங்கினர், ஆனால், 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சற்றே பதற்றத்திற்குள்ளாயினர். சுமார் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான். ஓராண்டுக்கு முன்பும் இதே காலேயில் வென்றது பாகிஸ்தான். இப்போதும் காலேயில்தான் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. அதாவது அதிசயம் என்னவெனில் சரியாக ஓராண்டுக்கு முன்னர் இதே ஜூலை 20ம் தேதிதான் காலேயில் பாகிஸ்தான் இலங்கையை கடைசியாக வீழ்த்தியது.
இமாம் உல் ஹக் 50 நாட் அவுட் . இன்னொரு முனையில் ஆடிய ஆகா சல்மான், ஜெயசூரியா வீசிய பந்தை மேலேறி அந்து லாங் ஆஃப் திசையில் சிக்சர் விளாசி வெற்றி ரன்களை எடுத்தார். சுலபமாக பெற வேண்டிய வெற்றியை பாகிஸ்தான் கடினமாக்கிக் கொண்டது. எப்படி வங்கதேசத்தில் இதே போன்ற இலக்கை இந்திய அணி விரட்ட அரும்பாடு பட்டு விக்கெட்டுகளை இழந்து வென்றதோ அதே போக்கில்தான் பாகிஸ்தானும் இன்று வென்றது.
பாகிஸ்தான் 4 விக்கெட்டுகளில் வென்றிருக்கலாம், ஆனால் இந்தப் பிட்சில் 131 ரன்கள் இலக்கை விரட்ட இப்படித் திணறியது நிச்சயம் அந்த அணிப் பயிற்சியாளரை நடுக்கத்தில் ஆழ்த்தியிருக்கவே செய்யும். பாகிஸ்தான் இன்று பாசிட்டிவாக தொடங்கியது, முதல் ஓவரிலேயே பாபர் அசாம் 2 பவுண்டரிகளை விளாசினார். இன்று ஆட்டம் தொடங்கி 5 ஓவர்களிலேயே 30 ரன்கள் விறுவிறுவென வந்துவிட்டது.
ஆனால், பாபர் அசாம் 28 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து ஜெயசூரியாவின் பந்தில் எல்.பி.ஆனார். இது ஒரு ஆர்ம் பால் ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே பிட்ச் ஆகி உள்ளே வந்தது பாபர் அசாம் வெளியே திரும்பும் என்று நினைக்க உள்ளே திரும்பி கால்காப்பைத்தாக்கியது, ரிவியூவும் அசாமை காப்பாற்றவில்லை. 79/4 என்றவுடன் பாகிஸ்தான் இப்படியெல்லாம் தோற்கும் என்பது பற்றிய அச்சம் அந்த அணிக்கு ஏற்பட்டிருக்கும்.
ஏனெனில் 2009-ம் ஆண்டு இதே மைதானத்தில் 167 ரன்கள் இலக்கை விரட்ட முடியாமல் 117 ரன்களுக்கு ரங்கனா ஹெராத், அஜந்தா மெண்டிஸிடம் காலியானது பாகிஸ்தான், அது கண்முன்னால் வந்து போகுமல்லவா? ஆனால் முதல் இன்னிங்ஸ் இரட்டைச் சத ஆட்ட நாயகன் சாவுத் ஷகீல் இறங்கி 38 பந்துகளில் 30 ரன்களை விளாச ஆட்டம் பாகிஸ்தானுக்கு நம்பிக்கையளிப்பதாக மாறியது. ஷகீல் மட்டும் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் அவரது சராசரி 100ஐத் தொட்டிருக்கும், ஆனால் அவர் ஆட்டமிழந்து விட்டார். ஆனால் இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு எந்த வித பதற்றமும் ஏற்படவில்லை.
இவருக்குப் பிறகு சர்பராஸ் அகமதுவும் தேவையின்றி ஆட்டமிழந்தார், ஆனால் அப்போது வெற்றிக்குத் தேவை வெறும் 4 ரன்களே இருந்தது, ஆகா சல்மான் சிக்சருக்கு விரட்டி வெற்றி ரன்களை எடுத்தார். பாகிஸ்தானும் பாசிட்டிவ் ஆக ஆடுவது என்ற இங்கிலாந்து பாணி முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இது கைக்கொடுக்குமா அல்லது ஏற்கெனவே நம்ப முடியாமல் இருக்கும் அந்த அணியை மேலும் பலவீனமாக்குமா என்பது போகப்போகவே தெரியும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago