லாட்ர்ஸில் பெற்ற வெற்றி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிய மண்ணில் இந்திய டெஸ்ட் அணி பெற்ற வெற்றி என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஆண்டில் தென்னாப்பிரிக்காவிலும் நியூஸிலாந்திலும் மேற்கொண்ட போராட்டங்கள், லார்ட்ஸில் பெற்ற வெற்றி ஆகியவை இந்த இளம் அணியை இதற்கு முந்தைய காலகட்டத்து அணியுடன் ஒப்பிடவைத்துள்ளன.
அந்த அணிக்கும் இந்த அணிக்கும் பொதுவான சிலர் மகேந்திர சிங் தோனி, இஷாந்த் ஷர்மா போன்றோர் இருந்தாலும், அது மிகுதியும் பல களம் கண்ட அனுபவஸ்தர்களின் அணி. சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், வி.வி.எஸ். லட்சுமணன், சௌரவ் கங்குலி, ஜாகீர் கான், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் இதன் முக்கியமான உறுப்பினர்கள். வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர் ஆகியோர் ஒரு கட்டத்தில் இந்தப் படையின் முன்னணி வீரர்கள்.
தோனியின் பங்கு
பிந்தைய கட்டத்தில் இந்த மூத்தோர் அணியைத் தலைமை ஏற்று முதிர்ச்சியுடன் வழிநடத்திய தோனிக்கும் சில போட்டிகளில் அற்புதமாகப் பந்து வீசிய இஷாந்த் சர்மாவுக்கும் இந்த அணியின் வெற்றிகளில் பங்கு உண்டு. ஆனாலும் சச்சின், திராவிட், லட்சுமணன், ஜாகீர், கும்ப்ளே ஆகிய ஐவர்தான் வெளிநாடுகளில் நேற்றைய அணியின் அச்சாணி போன்றவர்கள் என்று சொல்லலாம். 1990-களின் இறுதியிலிருந்து 2009 வரையிலும் இவர்களே அணியின் அடையாளம். குறிப்பாக வெளிநாடுகளில்.
இவர்களில் யாரும் இன்றைய இளம் அணியில் இல்லை. இந்நிலை யில் இன்றைய அணி தன்னை நிரூபித்துக்கொள்ளும் வேகமும் தங்களது முன்னோடிகளின் சாதனைகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டிய பொறுப்பும் கொண்டு செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டுமானால் நேற்றைய அணி சாதித்த ஒரு முக்கியமான அம்சத்தை இவர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
வெளிநாட்டில் பெற்ற வெற்றிகள்
வெளி மண்ணில் வெற்றி. அதுதான் அந்த முக்கியமான அம்சம். 1932-ல் தன் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய இந்தியா அடுத்த 67 ஆண்டுகளில் (1999வரை) வெளிமண்ணில் பெற்ற வெற்றிகள் 13. அதன் பிறகு 11 ஆண்டுகளில் (2010வரை) பெற்ற வெற்றிகள் 23. இந்த எண்ணே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றைச் சொல்லிவிடும்.
கங்குலி, திராவிட், கும்ப்ளே, தோனி ஆகியோர் இந்தக் காலகட்டத்தில் தலைமை ஏற்றிருக்கிறார்கள். போர்ட் ஆஃப் ஸ்பெயின் (மேற்கிந்தியத் தீவுகள்), அடிலெய்ட், பெர்த் (ஆஸ்திரேலியா), ஜோஹனஸ்பர்க் (தென்னாப்பிரிக்கா), லீட்ஸ் (இங்கிலாந்து) ஆகிய ஆடு களங்கள் உட்பட உலகின் பல இடங்களில் பெற்ற வெற்றிகள் இவை.
8 தோல்விகள்
இந்த வெற்றிகளுக்குப் பின்னால் எந்தப் பந்து வீச்சையும் எதிர்கொள்ளும் மட்டை வீச்சும் எந்த மட்டை வரிசையையும் முனை முறிக்கும் பந்து வீச்சும் இருந்தன. இவை இரண்டும் மங்கியிருந்த 2011-ம் ஆண்டில் இந்தியாவால் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் வெற்றிபெற முடியவில்லை. 2011-ல் கும்ப்ளே இல்லை. ஜாகீர் கானின் உடல் திறன் பாதிக்கப்பட்டிருந்தது.
சச்சின் முதலானோரின் மட்டையின் பிரகாசம் மங்கியது. இஷாந்த் ஷர்மாவிடம் வேகமும் துல்லியமும் குறைந்திருந்தது. விளைவு வரிசையாக 8 தோல்விகள். இந்த 8 போட்டிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நேற்றைய அணி அந்நிய மண்ணில் இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுதியது என்று தயங்காமல் சொல்லலாம்.
அக்கினி பரீட்சை
இந்த வரலாற்றின் தொடர்ச்சியாக இன்றைய அணி இருக்கிறதா, இதை முன்னெடுத்துச் செல்லக்கூடிய திறன் அதனிடம் இருக்கிறதா என்பதே டெஸ்ட் அரங்கில் இன்றைய இந்திய அணியின் முன் இருக்கும் கேள்வி. முழுமையான மதிப்பீட்டையும் ஒப்பீட்டையும் செய்யப் பத்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றாலும் நம்பிக்கை தரும் தொடக்கத்தை மேலெடுத்துச் செல்ல இந்த ஆண்டிலேயே இந்திய அணிக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலுமாக வரும் ஜனவரிவரை இன்னமும் ஏழு டெஸ்ட்களை ஆடவிருக்கிறது. இந்த ஏழு டெஸ்ட்கள் அக்கினிப் பரீட்சைபோல என்று சொல்லலாம். இந்த நெருப்பில் புகுந்து புடம் போட்ட தங்கமாக வெளிவருவார்களா இளம் வீரர்கள்?
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago