ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொள்கிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறுகிறது. இம்முறை போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்ததால் ஆசிய கோப்பை கிரிக்கெட்டை கலப்பின மாதிரி அடிப்படையில் நடத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.
இந்தத் தொடரை பொறுத்தவரை மொத்தம் 13 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 9 போட்டிகள் இலங்கையிலும், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும் நடக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நோபாளம் ஆகிய 6 அணிகள் ஆசிய கோப்பை ஒருநாள் தொடர் போட்டியில் பங்கேற்கின்றன.
» பிராட்மேனுக்கு அடுத்து சிறந்த சராசரி 98.50 - பாகிஸ்தான் வீரர் சாவுத் ஷகீல் இரட்டைச் சத சாதனை!
» உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்குமா? - உயர்மட்ட குழு அமைத்த பாக். பிரதமர்
இந்த 6 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். இதில் லீக் போட்டிகள் முடிவில் 4 அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. இந்நிலையில் தொடருக்கான அட்டவணையை ஏசிசி வெளியிட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நேபாளத்தை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். செப்டம்பர் 2-ம் தேதி இலங்கையில் நடைபெறும் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறும் போட்டியில் நேபாளத்தை எதிர்கொள்கிறது இந்தியா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago