இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: மே.இ. தீவுகள் அணியில் கெவின் சின்க்ளேர்

By செய்திப்பிரிவு

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நாளை (20-ம் தேதி) தொடங்குகிறது இந்த ஆட்டத்துக்கான மேற்கு இந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ரேமன் ரெய்பர் நீக்கப்பட்டுள்ளார்.

அவர் முதல் டெஸ்டில் முறையே 2 மற்றும் 11 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ரேமன் ரெய்பருக்கு பதிலாக சுழற்பந்துவீச்சு ஆலாவுண்டரான கெவின் சின்க்ளேர் சேர்க்கப்பட்டுள்ளார்.

சின்க்ளேர், இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இல்லை. அதேவேளையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 7 ஆட்டங்களில் பங்கேற்று 11 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார். முதல் தர போட்டிகளில் 18 ஆட்டங்களில் விளையாடி உள்ள சின்க்ளேரின் பேட்டிங் சராசரி 20 ஆகும். முதல் டெஸ்ட் போட்டியில் உடல் உபாதை காரணமாக 3 செஷன்கள் களமிறங்காமல் இருந்த சுழற்பந்து வீச்சாளர் ரஹ்கீம் கார்ன்வாலுக்கும் அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த மாற்றமும் அணியில் செய்யப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்