தேசிய டைவிங் போட்டி: வெள்ளி வென்றார் அபிஷேக்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் 39-வது சப்-ஜூனியரமற்றும் 49-வது ஜுனியர் தேசிய டைவிங் மற்றும் வாட்டர் போலோ போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் நேற்று தொடங்கியது.

வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 500 வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.

டைலிங் போட்டியில் குரூப்-1 சிறுவர்களுக்கான (16, 17, 18 வயது) 3 மீட்டர் ஸ்பிரிங் போர்டு பிரிவில் சர்வீசஸ் வீரர் இண்டிவிர் சாய்ராம் 415.20 புள்ளிகள் எடுத்து தங்கப் பதக்கம் வென்றார். தமிழக வீரர் யூ அபிஷேக் 369.15 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் பெற்றார்.

இதே பிரிவில் சிறுமியருக்கான போட்டியில் மத்திய பிரதேச வீராங்களை பாலக் சர்மா 292 புள்ளிகள் எடுத்து முதலிடமும், பெங்கால் வீராங்களை அனுஷா தாரா 257 புள்ளிகள் பெற்று 2-வது இடமும் பிடித்தனர்.

ஜூனியர் தேசிய வாட்டர் போலோ போட்டியில் சிறுவர்கள் பிரிவில் பெங்கால் அணி 22-2 என்ற கணக்கில் ஹரியாணாவையும், குஜராத் அணி 12-5 என்ற கணக்கில் தமிழக அணியையும் வென்றன. சிறுமியர் பிரிவில் நடத்த ஆட்டங்களில் கேரள அணி 8-1 என்ற கணக்கில் டெல்லியையும், கர்நாடகா அணி 26-1 என்ற கணக்கில் தமிழக அணியையும் நோற்கடித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்