மான்செஸ்டர்: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பாரம்பரியமிக்க 5 ஆட்டங்கள் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் 5-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை இழப்பதில் இருந்து அந்த அணி தப்பித்தது.
டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-2 என்ற கணக்கில் பின் தங்கி உள்ள நிலையில் 4-வது ஆட்டம் மான்செஸ்டர் நகரில் இன்று பிற்பகல் 3.30மணி அளவில் தொடங்குகிறது. இந்த ஆட்டத்துக்கான 11 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று முன்தினமே அறிவித்தது. இதில் ஆலி ராபின்பின் நீக்கப்பட்டு சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சேர்க்கப்பட்டிருந்தார்.
முதல் இரு போட்டிகளிலும் 3 விக்கெட்கள் மட்டுமே வீழ்திய ஆண்டர்சன் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாததால் 3-வது ஆட்டத்தில் நீக்கப்பட்டிருந்தார். எனினும் 4-வது போட்டி நடைபெறும் இடம் ஆண்டர்சனின் கவுண்டி அணியின் சொந்த மைதானமாகும். இதனால் அவர், இழந்த பார்மை மீட்டெடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தக் கூடும். இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது இங்கிலாந்து அணி.
ஏனெனில் தோல்வியை சந்தித்தாலோ அல்லது ஆட்டத்தை டிராவில் முடித்தாலோ தொடரை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். 3-வது டெஸ்ட் போட்டியில் கடும் அச்சுறுத்தலாக திகழ்ந்த மார்க் வுட் மீண்டும் ஒரு முறை ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் கொடுக்கக்கூடும். கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராடு ஆகியோரும் பந்து வீச்சில் பலம் சேர்ப்பவர்களாக திகழ்கின்றனர்.
» உலகக் கோப்பை தொடருக்கான திட்டங்கள்: ராகுல் திராவிட், ரோஹித் சர்மாவுடன் ஆலோசனை நடத்துகிறார் அகர்கர்
» ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள்: முதலிடத்தில் பிரதமர் மோடி; விஜய்க்கு 3ஆம் இடம்
பேட்டிங்கில் பென் டக்கெட், ஸாக் கிராவ்லி, ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சீரான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இவர்களுடன் ஜானி பேர்ஸ்டோ. மொயின் அலி ஆகியோரும் மட்டையை சுழற்றினால் அணியின் பலம் அதிகரிக்கும் ஆலி போப் விலகி உள்ளதால் பேட்டிங் வரிசையில் மொயின் அலி 3-வது வீரராக களமிறங்க உள்ளார். இதனால் அவரிடம் இருந்து மேம்பட்ட திறன் வெளிப்படக்கூடும்.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2001-ம் ஆண்டுக்கு பின்னர் இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் தொடரை வெல்வதில் முனைப்பு காட்டக்கூடும். தொடக்க வீரரான டேவிட் வார்னர், 3-வது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் ஸ்டுவர்ட் பிராடு பந்துவீச்சில் எளிதாக தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரிடம் இருந்து சமீபகாலமாகவே தொடர்ச்சியாக சிறந்த திறன் வெளிப்படுவதில்லை. இதனால் அவரது இடம் கேள்விக்குறியாக மாறி உள்ளது.
அநேகமாக அவர், நீக்கப்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை. மார்னஷ் லபுஷேனின் ஆட்டமும் இந்த தொட ரில் குறிப்பிடும் வகையில் அமையவில்லை அணியில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் சீரான செயல்திறனை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறார் லபுஷேன். மற்றொரு நடுவரிசை பேட்ஸ்மேனான நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும் கடந்த சில இன்னிங்ஸில் தடுமாற்றம் கண்டார். இவர்கள் இருவருமே கடந்த 18 இன்னிங்ஸ்களில் தலா ஒரு சதம், அரைசதம் மட்டுமே எடுத்துள்ளனர்.
3-வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய மிட்செல் மார்ஷுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். கேமரூள் கிரீன் காயம் அடைந்ததன் காரணமாகவே மிட்செல் மார்ஷ் களமிறக்கப்பட்டிருந்தார். தற்போது கேமரூன் கிரீன் உடற்தகுதியை எட்டிவிட்டார். இதனால் இவர்கள் இருவரையும் விளையாடும் லெவனில் இடம் பெறச் செய்வது குறித்து ஆஸ்திரேலிய அணி ஆலோசிக்லாம்.
மான்செஸ்டர் ஒல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 16 டெஸ்ட் போட்டிகளில் 13-ல் வெற்றி கண்டுள்ளது. ஒன்றில் மட்டுமே தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியை கடந்த 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெற்றிருந்தது இங்கிலாந்து அணி.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 mins ago
விளையாட்டு
34 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago