ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ஒரு மோட்டார் வாகனப் பிரியர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எண்ணிலடங்கா பைக் மற்றும் கார்கள் அவர் வீட்டு கேராஜில் அணிவகுத்து நிற்கின்றன.
தோனி தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வின் தொடக்க நாட்களில் தனக்கும், சக வீரர்களுக்கும் போட்டிகளின்போது பரிசாக வழங்கப்படும் வாகனங்களை மைதானத்துக்குள் ஜாலியாக ரைடு செய்வது வழக்கம். கடந்த பிப்ரவரியில் தனது வீட்டில் இருந்து ராஞ்சி கிரிக்கெட் மைதானத்துக்கு அப்பாச்சி (Apache RR 310) பைக்கில் தோனி வந்திருந்தார். சென்னை வீதிகளிலும் தோனி பைக் ஓட்டியுள்ளார்.
ஹம்மர் எச் 2, மிட்சுபிஷி பஜேரோ, ஜி.எம்.சி சியரா பிக்-அப் டிரக், போர்ஷே பாக்ஸ்டர், ஃபெராரி 500 ஜி.டி.ஓ, ஆடி கியூ7, மஹிந்திரா ஸ்கார்பியோ, ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ சீரிஸ் மற்றும் அண்மையில் வாங்கிய ஃபயர்பேர்ட் டிரான்ஸ் ஆம் ரக விண்டேஜ் கார் என பல கார்களை தோனி தன் வீட்டில் வைத்துள்ளார். இது தவிர ஹெல்கேட், நிஞ்சா மாதிரியான பைக்குகள் உட்பட நூற்றுக்கணக்கான பைக்குகளும் அவரிடம் உள்ளது.
இந்நிலையில், தோனியின் விசாலமான கேராஜை முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் பார்வையிட்டுள்ளார். அதை வீடியோவாக படம் பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். “அற்புத மனிதரான எம்.எஸ்.தோனியின் அற்புத சேகரிப்பு. சிறந்த சாதனையாளர் அவர். இந்த வீடியோவில் நீங்கள் பார்ப்பது அவரது ராஞ்சி வீட்டில் அவர் சேகரித்து வைத்துள்ள கார்கள் மற்றும் பைக்குகள் தான். அவரது வாகன மோகத்தை கண்டு வியப்படைக்கிறேன்” என வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
» ஜூலை 18, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு
» 2007 ஐபோன் 4ஜிபி ‘வின்டேஜ்’ மாடல் போன் ரூ.1.56 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
சுமார் 1.49 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவில் கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்துள்ள தோனி, தன் வீட்டு கேராஜை காண்பிக்கிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago