SL vs PAK டெஸ்ட் போட்டி: பாக். அணி போராட்டம்

By செய்திப்பிரிவு

காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து போராடி வருகிறது.

காலே நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் 95.2 ஓவர்களில் 312 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. தனது 10-வது சதத்தை விளாசிய தனஞ்ஜெயா டி சில்வா 214 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 122 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரமேஷ் மெண்டிஸ் 5, பிரபாத் ஜெயசூர்யா 4, கசன் ரஜிதா 8 ரன்களில் வெளியேறினர்.

பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் ஷா அப்ரீடி, நசீம் ஷா, அப்ரார் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 20.2 ஓவர்களில் 101 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இமாம் உல் ஹக் 1, அப்துல்லா ஷபிக் 19, ஷான் மசூத் 39, கேப்டன் பாபர் அஸம் 13, சர்ப்ராஸ் அகமது 17 ரன்களில் ஆட்டமிழந்தனர். 6-வது விக்கெட்டுக்கு இணைந்த சவுத் ஷகீல், அகா சல்மான் ஜோடி சிறப்பாக அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அரை சதம் கடந்தனர்.

2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் பாகிஸ்தான் அணி 45 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. சவுத் ஷகீல் 69, அகா சல்மான் 61 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.கைவசம் 5 விக்கெட்கள் இருக்க 91 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது பாகிஸ்தான் அணி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்