பாங்காக்: நடப்பு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 27 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது இந்தியா. 6 தங்கம், 12 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் நடைபெற்றது. 42 நாடுகளை சேர்ந்த தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். ஜூலை 12 முதல் 16-ம் தேதி வரையில் இந்த தொடர் நடைபெற்றது. கடைசி நாளன்று இந்திய வீரர்கள் மொத்தம் 13 பதக்கங்களை வென்று அசத்தினர். எட்டு வெள்ளி மற்றும் 5 வெண்கலம் இதில் அடங்கும்.
அஜய் குமார், அப்துல்லா ஆபூபக்கர், தஜிந்தர்பால் சிங், ஜோதி எர்ராஜி, 400 மீட்டர் ரிலே (ராஜேஷ், ஐஸ்வர்யா, அமோஜ், சுபா), பருல் சவுத்ரி ஆகியோர் இந்தியாவுக்காக தங்கம் வென்றனர்.
பதக்கப் பட்டியலில் முதலிடத்தை ஜப்பான் பிடித்தது. 16 தங்கம், 11 வெள்ளி, 10 வெண்கலம் என 37 பதக்கங்களை அந்த நாடு வென்றது. இரண்டாவது இடத்தை சீனா பிடித்தது. 8 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என 22 பதக்கங்களை சீனா வென்றது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago