ஆப்கனை வீழ்த்தியது வங்கதேசம்

By செய்திப்பிரிவு

சைல்ஹெட்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வங்கதேச அணி.

சைல்ஹெட் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மொகமது நபி 40 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் விளாசினார்.

155 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. லிட்டன் தாஸ் 18, ரோனி 4, நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 14, ஷகிப் அல் ஹசன் 19, ஷமிம் ஹோசைன் 33 ரன்களில் ஆட்டமிழந்தனர். கரிம் ஜனத் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மெஹ்தி ஹசன் (8), அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய தஸ்கின் அகமது (0), நஸம் (0) ஆகியோரை கரிம் வெளியேற்றி ஹாட்ரிக் சாதனை படைக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 2 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய ஷோரிபுல் இஸ்லாம் பவுண்டரி விளாச வங்கதேச அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தவ்ஹித் ஹ்ரிடோய் 32 பந்துகளில், 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்